கனடாவில் மீண்டும் பிரதமர் ஆனார் ஜஸ்டின் ட்ரூடோ .. ஆனால்?

கனடா நாட்டின் பிரதமராக உலகத் தமிழர்களின் அபிமானத்தைப் பெற்றுள்ள ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பதவியேற்க உள்ளார். ஆனால் கனடா பாராளுமன்றத்தில் கடந்த தேர்தலை விட 30 இடங்கள் குறைவாகப் பெற்று மைனாரிட்டி அரசாக அமைகிறது. திங்கட்கிழமை கனடாவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் உடனுக்குடன் தெரிய வந்துள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 155 எம்.பி.க்கள் கிடைத்துள்ளன. எதிரணியில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 122 எம்.பி.க்களை பெற்றுள்ளது. ப்ளாக் குபெக்வா கட்சி 32 , புதிய ஜனநாயகக்
 

னடா நாட்டின் பிரதமராக உலகத் தமிழர்களின் அபிமானத்தைப் பெற்றுள்ள ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பதவியேற்க உள்ளார். ஆனால் கனடா பாராளுமன்றத்தில் கடந்த தேர்தலை விட 30 இடங்கள் குறைவாகப் பெற்று மைனாரிட்டி அரசாக அமைகிறது.

திங்கட்கிழமை கனடாவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் உடனுக்குடன் தெரிய வந்துள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 155 எம்.பி.க்கள் கிடைத்துள்ளன. எதிரணியில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 122 எம்.பி.க்களை பெற்றுள்ளது. ப்ளாக் குபெக்வா கட்சி 32 , புதிய ஜனநாயகக் கட்சி 25 , க்ரீன் கட்சி 3 , சுயேட்சை 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

பாராளுமன்றதில் பெரும்பான்மை பெறுவதற்கு 170 இடங்கள் தேவை. தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள ஜஸ்டின் ட்ரூடோ கட்சிக்கு, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதற்கு மேலும் 25 எம்.பி.க்கள் தேவை. 25 எம்.பி.க்கள் பெற்றுள்ள புதிய ஜனநாயகக் கட்சி ஜஸ்டின் ட்ரூடோவுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கட்சியின் தலைவர் ஜக்மித் சிங் இந்தியாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த இரண்டு கட்சிகளும் முன்னதாக கூட்டணி ஆட்சி அமைத்து இருந்தனர். கடந்த தேர்தலில் தனி மெஜாரிட்டி பெற்ற ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, இந்தத் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.