கூகுளில் தகவல்கள் திருடப்படுகின்றன! இழப்பீடு கேட்டு அமெரிக்க நிறுவனம் வழக்கு!

சமூக வலைதளங்களில் மிகப்பெரிய தேடுதல் நிறுவனங்களில் உலகப் புகழ் பெற்றது கூகுள் நிறுவனம். தினமும் கோடிக்கணக்கான பேர் இந்த சேவையை உபயோகித்து வருகின்றனர். இந்நிலையில் இன்காக்னிட்டோ மோடில் தேடுபவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதாக கூகுள் நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பயனர்கள் தேடும் தகவல்கள் பதிவு செய்யப்பட மாட்டாது என்ற நம்பிக்கையில் மட்டுமே கோடிக்கணக்கானவர்கள் உபயோகித்து வருகின்றனர். அதை மீறுவது பெரும் குற்றம். இதை எதிர்த்து கூகுள் நிறுவனத்தின் மீது கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள போயஸ் ஷில்லர்
 

மூக வலைதளங்களில் மிகப்பெரிய தேடுதல் நிறுவனங்களில் உலகப் புகழ் பெற்றது கூகுள் நிறுவனம். தினமும் கோடிக்கணக்கான பேர் இந்த சேவையை உபயோகித்து வருகின்றனர். இந்நிலையில் இன்காக்னிட்டோ மோடில் தேடுபவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதாக கூகுள் நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பயனர்கள் தேடும் தகவல்கள் பதிவு செய்யப்பட மாட்டாது என்ற நம்பிக்கையில் மட்டுமே கோடிக்கணக்கானவர்கள் உபயோகித்து வருகின்றனர். அதை மீறுவது பெரும் குற்றம்.

இதை எதிர்த்து கூகுள் நிறுவனத்தின் மீது கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள போயஸ் ஷில்லர் பிளெக்ஸ்னர் சட்ட நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்காக 5 பில்லியன் டாலர் தொகையை இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள மக்களின் தனிப்பட்ட தகவல் தொடர்புகள் சேகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்படுகின்றன எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com