ஏரியில் உடல் மீட்பு.. அமெரிக்க இந்திய மாணவியின் மரணத்திற்கு காரணம் செல்போன்?

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவியின் உடல் ஏரியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. செல்போன் பேசிய படியே சென்றதால் விபரீதம் ஏற்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இண்டியானா மாநிலத்தில் உள்ள Norte Dame பல்கலைக் கழகத்தில் இளங்கலை இறுதியாண்டு படித்து வந்த மாணவி ஆன்ரோஸ் ஜெர்ரி ஜனவரி 21ம் தேதி முதல் காணாமல் போனார். அவரைத் தேடி போலீசாரும், தன்னார்வலர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இறுதியில் செயின்ட் மேரி ஏரியில் அவருடைய உடல் கண்டுபிடிக்கப்பட்டது. வெளியே எடுத்து வரப்பட்ட உடலில்
 

மெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவியின் உடல் ஏரியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. செல்போன் பேசிய படியே சென்றதால் விபரீதம் ஏற்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இண்டியானா மாநிலத்தில் உள்ள Norte Dame பல்கலைக் கழகத்தில் இளங்கலை இறுதியாண்டு படித்து வந்த மாணவி  ஆன்ரோஸ் ஜெர்ரி ஜனவரி 21ம் தேதி முதல் காணாமல் போனார். அவரைத் தேடி போலீசாரும், தன்னார்வலர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இறுதியில் செயின்ட் மேரி ஏரியில் அவருடைய உடல் கண்டுபிடிக்கப்பட்டது. வெளியே எடுத்து வரப்பட்ட உடலில் செல்போனும், காதில் பொறுத்தப்பட்டிருந்த Airbud ம் அப்படியே இருந்துள்ளதாகத் தெரிய வந்தது.

அவருடைய உடலில் எந்தவித காயமும் இல்லை என்றும் கூறப்படுகிறது. செல்போனில் பேசியபடியே ஏரிக்கரையில் நடந்து சென்றவர், தவறி விழுந்து ஏரியில் மூழ்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அறிவியல் மற்றும் வணிகப் பிரிவில் இறுதியாண்டு படித்து வந்த ஆன்ரோஸ், பல் மருத்துவத்தில் மேற்படிப்பு படிக்க ஆர்வம் கொண்டிருந்தார் என்று கூறுகிறார்கள். இளங்கலை இறுதியாண்டு படிப்பு முடிவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆன்ரோஸ்-க்கு இந்த சோக முடிவு ஏற்பட்டுள்ளது.

ஆன்ரோஸ்-ன் தந்தை கணிணித்துறையில் வல்லுனராகவும் தாயார் பல்மருத்துவராகவும் உள்ளார்கள். கேரள மாநிலத்திலிருந்து 2000ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் குடியேறியுள்ளார்கள்.

செல்போன் பேசியபடியே நடந்து சென்று சாலையைக் கடப்பதும், வாகனங்கள் ஓட்டுவதும் மிகவும் ஆபத்தானது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

http://A1TamilNews.com