கனடாவை போல் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடுங்கள்… மைனஸ் டிகிரி கடும்குளிரிலும் தூத்துக்குடி மக்களுக்காக ஆர்ப்பரித்த தமிழர்கள்!

ட்ரோண்டோ: கனடாவின் ட்ரோண்டோ நகரில் தூத்துக்குடியில் போராடிவரும் மக்களுக்கு ஆதரவாக தமிழர்கள் திரண்டனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். ஸ்டெர்லைட் ஆலை தாமிரபரணி தண்ணீரை எவ்வளவு உறிஞ்சுகிறது, எப்படியெல்லாம் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கிறது என்பதை விரிவாக எடுத்துரைத்தார்கள். ஸ்டெர்லைட் போல இரண்டு பெரிய காப்பர் தொழிற்சாலைகள் கனடாவில் நிரந்தரமாக மூடப்பட்டதை சுட்டிக்காட்டினார்கள். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்ற ஒரே காரணத்திற்காக அவை மூடப்பட்டது என்பதையும் நினைவு கூர்ந்தனர்.சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதற்காக இத்தகைய
 

ட்ரோண்டோ: கனடாவின் ட்ரோண்டோ நகரில் தூத்துக்குடியில் போராடிவரும் மக்களுக்கு ஆதரவாக தமிழர்கள் திரண்டனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.

ஸ்டெர்லைட் ஆலை தாமிரபரணி தண்ணீரை எவ்வளவு உறிஞ்சுகிறது, எப்படியெல்லாம் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கிறது என்பதை விரிவாக எடுத்துரைத்தார்கள்.

ஸ்டெர்லைட் போல இரண்டு பெரிய காப்பர் தொழிற்சாலைகள் கனடாவில் நிரந்தரமாக மூடப்பட்டதை சுட்டிக்காட்டினார்கள். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்ற ஒரே காரணத்திற்காக அவை மூடப்பட்டது என்பதையும் நினைவு கூர்ந்தனர்.சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதற்காக இத்தகைய அல்ட்ரா ரெட் வகை ஆலைகளை மூடுவது தான் சரி என்ற வாதத்தை முன் வைத்தார்கள். மக்கள் வாழ்வதற்கேற்ற சூழலை அழித்து தொழில் வளம் தேவையா என்ற கேள்வியையும் எழுப்பினார்கள்.

மக்களுக்காக ஆலைகளை மூடும் கனடா அரசாங்கம் போல், இந்திய அரசாங்கமும் மக்கள் நலனை முன்னிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்ற கோரிக்கைகள் விடுத்தார்கள்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான முழக்கங்களும் எழுப்பப் பட்டது. சுற்றுச்சூழல் சீர்க்கேட்டிலிருந்து தூத்துக்குடியை மீட்டெடுப்போம் என்றும் முழங்கினார்கள்.

கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் ட்ரோண்டோவின் Dundas Square ல் திரண்டிருந்த தமிழர்கள், அங்கிருந்து ஊர்வலமாக இந்திய தூதரகம் வரைச் சென்றார்கள்.

தூதரகம் முன்பு கோரிக்கைகளை முழங்கியவர்கள், ‘இந்தப் போராட்டம் தூத்துக்குடி மக்களின் துயர் துடைக்க, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவதற்கானது. இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு அறவழியில் நடத்தப்படும் போராட்டமாகும்’ என்று சூளுரைத்தார்கள்.

இந்தியாவின் தென்கோடியில் உள்ள தூத்துக்குடி மக்களுக்காக உலகின் வடகோடியிலும் தமிழர்கள் ஒன்று திரண்டு போராடுவது குறிப்பிடத்தக்கது.

[ See image gallery at a1tamilnews.com]