ஹைதி அதிபர் ஜோவனல் மோயிஸ் படுகொலை... 2 அமெரிக்கர்கள் உட்பட 17 பேர் கைது

 

ஹைதி அதிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ் (53) நேற்று முன்தினம் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த பயங்கர சம்பவத்தின்போது அவரது மனைவி மார்டின் மோயிஸ் படுகாயம்

அவருக்கு அங்கு முதலில் முதலுதவி அளித்துவிட்டு, புளோரிடாவுக்கு ஆம்புலன்ஸ் விமானத்தில் எடுத்துச்சென்று அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் அந்த நாட்டை உலுக்கி உள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என கருதப்பட்ட 4 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், 28 பேர் கொண்ட குழு அதிபரை கொலை செய்ததும், இதில் 26 பேர் கொலம்பியாவையும், 2 பேர் அமெரிக்கர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இவர்களில் 15 கொலம்பியர்களையும், 2 அமெரிக்கர்களையும் கைது செய்த போலீசார் மீதமுள்ளவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.