டெல்லி வன்முறை… அமெரிக்காவில் மாணவர்கள் போராட்டம்!

டெல்லியில் நடந்து வரும் வன்முறையை கண்டித்து அமெரிக்காவில் மாணவர்கள் அமைப்பு போராட்டம் அறிவித்துள்ளனர். South Asian Students Against Fascism என்ற தெற்காசிய மாணவர்கள் அமைப்பு இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். பிப்ரவரி 28ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி அளவில் அட்லாண்டா, சிகாகோ, சான் ஃப்ரான்சிஸ்கோ மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களில் இந்திய தூதரகங்கள் முன்பு இந்த போராட்டம் நடைபெற உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. Emergency! Stop State Sanctioned Violence in India என்ற முழக்கத்துடன் தெற்காசிய
 

டெல்லியில் நடந்து வரும் வன்முறையை கண்டித்து அமெரிக்காவில் மாணவர்கள் அமைப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.

South Asian Students Against Fascism என்ற தெற்காசிய மாணவர்கள் அமைப்பு இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். பிப்ரவரி 28ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி அளவில் அட்லாண்டா, சிகாகோ, சான் ஃப்ரான்சிஸ்கோ மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களில்  இந்திய தூதரகங்கள் முன்பு இந்த போராட்டம் நடைபெற உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Emergency! Stop State Sanctioned Violence in India என்ற முழக்கத்துடன் தெற்காசிய மாணவர்களின் போராட்டம் நடைபெற உள்ளது. இந்திய தூதரகங்கள் முன்பு கூடும் இந்த மாணவர்கள் இந்தியாவில் மத ஒற்றுமையை வலியுறுத்துவதோடு, வன்முறையில் பலியானவர்களுக்காக குரல் எழுப்புவோம் என்று கூறியுள்ளனர்.

இந்தியாவில் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி சட்டங்களுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது போலீசாரின் அத்துமீறிய வன்முறையை கண்டிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, மாணவர்களின் ஒற்றுமை,, மாணவர்களின் கல்விச் சுதந்திரம், இந்துத்துவா அரசியலுக்கு எதிரான குரல் ஆகிவற்றிற்கு ஆதரவாகவும் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் மாணவர்கள் போராடும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் உள்ள தெற்காசிய மாணவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். 

– http://www.A1TamilNews.com