“வீட்டிலிருத்தல்” நேரத்தில் அறிவோம் அம்பேத்கர் – அமெரிக்க அம்பேத்கர் கிங் படிப்பு வட்டத்தின் 10 நாள் பட்டறை!
அமெரிக்காவில் இயங்கி வரும் அம்பேத்கர் – கிங் படிப்பு வட்டத்தின் சார்பில் 10 நாட்கள், அம்பேத்கர் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் தொடர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அமெரிக்கா, இந்தியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் டாக்டர்.வி.கீதா, சமூக, பொருளாதார, அரசியல்,கலாச்சாரம் என பல்வேறு தளங்களில் அம்பேத்கரின் சமூகப் பங்களிப்பு பற்றி உரையாற்றுகிறார்.
சாதி- ஒரு புதிய வார்த்தை, சாதி – தீண்டாமையும் அரசியலும், பார்ப்பனியம், தேசியவாதம் பற்றி அம்பேத்கரின் பார்வைகள், பொருளாதாரம், சோசியலிசம் மற்றும் தீண்டாமை பற்றிய கேள்விகள், புத்தமதமும் சாதி துறத்தலும் என்ற தலைப்புகளில் 10 நாட்கள் நடைபெறும் இந்த தொடர் சொற்பொழிவு அறிமுகக் கூட்டத்துடன் திங்கட் கிழமை தொடங்கியது.
தொடர்ந்து, இந்திய நேரப்படி செவ்வாய், வியாழக்கிழமைகளில் காலை 7 மணி, அமெரிக்க பசிபிக் நேரப்படி திங்கள், புதன்கிழமைகளில் மாலை 6:30 மணிக்கு, ஒரு மணி நேரம் நடைபெற உள்ளது. ஆங்கிலத்தில் நடைபெறும் இந்த சொற்பொழிவில் உலகம் முழுவதும் இருந்தும் ஆர்வலர்கள் https://us04web.zoom.us/j/452299814 என்ற இணைப்பின் வழியாக கலந்து கொள்ளலாம்.
நிகழ்ச்சி பற்றிய மேலதிக தகவல்களுக்கு akscusa.org/lets-read-ambedkar-10-lectures-series/ என்ற இணைப்பில் காணலாம்.