இலங்கை 8 குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது!

கொழும்பு: இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்துள்ளனர், 400-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தும், இந்த தாக்குதலைத் தடுக்க முடியாமல் போயுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணையை அந்நாட்டு பாதுகாப்பு முகமைகள் மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது
 


கொழும்பு: இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களில் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்துள்ளனர், 400-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தும், இந்த தாக்குதலைத் தடுக்க முடியாமல் போயுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணையை அந்நாட்டு பாதுகாப்பு முகமைகள் மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் விஜயவர்தன் தெரிவித்துள்ளார்.

“8 தாக்குதலையும் நடத்தியவர்கள் ஒரே குழுவை சேர்ந்தவர்கள், அவர்கள் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலையே நடத்தியுள்ளனர். 7 பேரை கைது செய்யும் போதும் பாதுகாப்பு படையினருடன் சண்டையில் ஈடுபட்டனர்,” எனக் கூறியுள்ளார்.