நகரும் பூமி! குழம்பும் கூகுள் மேப்!!

பூமியின் காந்த வட துருவம் வழக்கத்தைவிட வேகமாக நகர்வதால் கைபேசிகளில் உள்ள மேப் தவறாக வழிகாட்ட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பூமியின் வட காந்த துருவம் கிழக்கு திசை நோக்கி நகர்வில்தான் இருக்கும் என்றாலும், தற்போது அதன் வேகம் அதிகரித்துள்ளதாக world magnetic model என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் 2020ல் மாற்றவேண்டிய காந்த துருவ திசைகளை தற்போதே மாற்ற வேண்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. world magnetic model அமைப்புதான் கைபேசிகளில் நாம் பயன்படுத்தும் நேவிகேஷன் செயலிகளுக்கான காந்த துருவ
 

பூமியின் காந்த வட துருவம் வழக்கத்தைவிட வேகமாக நகர்வதால் கைபேசிகளில் உள்ள மேப் தவறாக வழிகாட்ட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

பூமியின் வட காந்த துருவம் கிழக்கு திசை நோக்கி நகர்வில்தான் இருக்கும் என்றாலும், தற்போது அதன் வேகம் அதிகரித்துள்ளதாக world magnetic model என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால் 2020ல் மாற்றவேண்டிய காந்த துருவ திசைகளை தற்போதே மாற்ற வேண்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. world magnetic model அமைப்புதான் கைபேசிகளில் நாம் பயன்படுத்தும் நேவிகேஷன் செயலிகளுக்கான காந்த துருவ திசைகளை வழங்குகின்றன.

அதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதால் நேவிகேஷன் எனப்படும் வழிகாட்டிகளை நம்பும் விமான சேவை, பாதுகாப்புத் துறை ஆகியவையும் தாக்கத்தை சந்திக்க நேரிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.A1TamilNews.com