வந்தாச்சு புது ‘சேனல்’ வசதி.. WhatsApp-ன் அசத்தல் அப்டேட்..!

 

இந்தியா உட்பட 150 நாடுகளில் புதிதாக சேனல்கள் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம்படுத்தி உள்ளது.

உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. இதனால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பெரும்பாலான அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள், இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத்தான் பகிரப்படுகின்றன. தகவல் தொடர்பின் ராஜாவாக வாட்ஸ்அப் மாற்றியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் இப்போது புதிதாக சேனல்கள் வசதியைக் கொண்டு வந்துள்ளது. இந்தியா உட்பட 150 நாடுகளில் இந்த சேனல் வசதி இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் உள்ள பிராட்காஸ்ட் சேனலை போலவே தான் இது இருக்கிறது. டெலிகிராம் தளத்தில் இந்த வசதி ஏற்கனவே பல காலமாக இருக்கும் நிலையில், இப்போது வாட்ஸ்அப் தளத்திலும் அந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

வழக்கமான சாட்கள் அல்லது க்ரூப்களில் இருந்து இந்த சேனல்கள் மாறுபட்டதாக இருக்கும். குறிப்பாக இதில் ஒரு தரப்பினர் மட்டுமே மெசேஜ் அனுப்ப முடியும். உதாரணமாக நீங்கள் இந்திய கிரிக்கெட் அணியின் சேனலை பாலே செய்கிறீர்கள் என்றால், அவர்கள் அனுப்பும் மேசேஜ் மட்டுமே உங்களுக்கு வரும். உங்களால் எந்தவொரு மேசேஜ்ஜையும் அனுப்ப முடியாது. வாட்ஸ்அப் க்ரூப்களை போல இல்லாமல் இதில் சேனலை எத்தனை பேர் வேண்டுமானாலும் பாலே செய்யலாம்.

மேலும், யூசர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு சேனலை பாலோ செய்வோர் குறித்த தகவல்கள் ரகசியம் காக்கப்படும். அதாவது மற்ற யார் இந்த சேனலை பாலே செய்கிறார்கள் என்பதை ஒருவரால் பார்க்க முடியாது. இதன் மூலம் நமது மொபைல் எண் அடையாளம் தெரியாத நபர்களிடம் செல்வது தடுக்கப்படும். இந்த சேனலில் டெக்ஸ் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஸ்டிக்கர் என அனைத்தையும் அனுப்ப முடியும்.

இது குறித்து வாட்ப்ஸஅப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாங்கள் இந்தியாவிலும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாட்ஸ்அப் சேனல்கள் வசதிகளைக் கொண்டு வந்துள்ளோம் என்பதைக் கூர மகிழ்ச்சியடைகிறோம். இது ஒன்வே மெசேஜிங் முறையாகும். உங்களுக்குப் பிடித்த நபர்கள் அல்லது அமைப்புகள் குறித்த தகவல்களை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள இதை நாம் பயன்படுத்தலாம்.

தனியாக ‘அப்டேட்ஸ்’ என்ற இடத்தில் இந்த வசதியைக் கொண்டு வந்துள்ளனர். அது நமது வழக்கமான சாட்களில் இருந்து தனியாகவே இருக்கும். இதனால் வாட்ஸ்அப்பை சாட்களுக்கு பயன்படுத்தும் அனுபவம் மேம்படவே செய்யும் என்றும் வாட்ஸ்அப் சார்பில் கூறப்பட்டுள்ளது. சாட், மெயில், லிங்குகள் எனப் பல முறைகளில் நம்மால் இந்த சேனல்களில் சேர முடியும்.

இன்ஸ்டாகிராம் பிராட்கேஸ்ட் சேனல்களில் இருப்பதைப் போலவே இந்த வாட்ஸ்அப் சேனல்களிலும், பயனர்கள் அப்டேட்களுக்கு ஈமோஜி மூலம் ரியாக்ட் செய்யலாம். மேலும், சேனல்களில் மெசேஜ்களை அதிகம் குவிவதைத் தடுக்கும் வகையில், 30 நாட்கள் மட்டுமே இவை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு மெசேஜ்கள் வாட்ஸ்அப்பின் சர்வர்களில் இருந்து தானாக டெலிட் செய்யப்படுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 30 நாட்களில் அட்மின்களால் மேசேஜ்களை டெலிட் செய்யவும் முடியுமாம்.

வாட்ஸ்அப் நிறுவனம் வரும் காலத்தில் இதை வத்த வருவாய் ஈட்டும் முயற்சியில் இறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கான சிறு முயற்சியாகவே இந்த அப்டேட்டை கொடுத்துள்ளனர். விரைவில் இந்த சேனல்களில் மேலும் பல புதிய வசதிகளைக் கொண்டு வந்து அதன் மூலம் வருவாய் ஈட்டும் திட்டத்தை வாட்ஸ்அப் நிறுவனம் வைத்துள்ளது.