துப்பாக்கிச் சுடுதலில் தங்கத்தை சுட்டார் இளவேனில்!

உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் பைனல் தொடரில், தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார். சீனாவில் நடைபெற்று வரும் தொடரில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டியில் 250. 8 புள்ளிகள் பெற்று இளவேனில் தங்கப்பதக்கத்தை வசமாக்கினார். 20 வயதான இளவேனில், அனுபவ வீராங்கனைகள் பலரையும் தோற்கடித்து தங்கத்தை தமதாக்கியிருக்கிறார். அவர், வெள்ளிப் பதக்கம் வென்ற சீன தைபே வீராங்கனையை விட 0.1 புள்ளி அதிகமாக பெற்று திரில் வெற்றி பெற்றுள்ளார். சீன தைபே
 

உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் பைனல் தொடரில், தமிழக‌ வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார்.

சீனாவில் ‌‌நடைபெற்று வரும் தொடரில், 10 மீட்டர் ஏர் ரைபிள்‌ பிரிவில் இறுதிப் போட்டியில் 250. 8 புள்ளிகள் பெற்று இளவேனில் தங்கப்பதக்கத்தை வசமாக்கினார். 20 வயதான ‌இளவேனில், அனுபவ வீராங்கனைகள் ப‌லரையும் தோற்கடித்து தங்கத்தை தமதாக்கியிருக்கிறார். அவர், வெள்ளிப் பதக்கம் வென்ற சீன தைபே வீராங்கனையை விட 0.1 புள்ளி அதிகமாக பெற்று திரில் வெற்றி பெற்றுள்ளார். சீன தைபே வீராங்‌கனை லின்‌ இங் ஷின் 250.7 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ரோ‌மானியாவின் ஜியார்ஜிடா 229 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.‌ பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பையில் தமிழக வீராங்கனை இளவேனில் ஏற்கனவே தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

-வணக்கம் இந்தியா