அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் பலி!! சோகத்தில் ரசிகர்கள்!

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக விளங்கிய உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்தான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். 90-களில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.

ஆண்ட்ரூ சைமெண்ட்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக 1998 முதல் 2009-ம் ஆண்டு வரை களமிறங்கினார். இவர் 198 ஒருநாள் போட்டிகளிலும், 26 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிகளில் முக்கிய பங்கு வகித்தார். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.

இவர் ஒருநாள் போட்டியில் 5,088 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 1,462 ரன்களும் எடுத்துள்ளார். இவை தவிர ஆஸ்திரேலிய அணிக்காக 14 சர்வதேச டி20 போட்டிகளில் களமிறங்கி 337 ரன்கள் அடித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு நடைபெற்ற கார் விபத்தில் சிக்கினார். இவர் குயின்ஸ்லாந்தின் டவுன்ஸ்வில் பகுதியில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மரணம் கிரிக்கெட் உலகை உலுக்கி உள்ளது. இவருக்கு வெறும் 46 வயதே ஆகிறது. உலகம் முழுக்க இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் இவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னே உயிரிழந்தார். இப்போது இன்னொரு ஆஸ்திரேலிய வீரர் பலியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு பேரும் ஆஸ்திரேலிய அணியில் ஒரே சமயத்தில் ஆடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.