நொறுக்குத்தீனிகளால் ஆபத்து! அளவில் உப்பு இருப்பது கண்டுபிடிப்பு!!

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பெரும்பாலான நொறுக்குத்தீனிகளில் ஆபத்தான அளவில் உப்பும் கொழுப்புச்சத்தும் கலந்திருப்பதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது. ஆய்வக சோதனையில் இது தெரியவந்துள்ளதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது. FSSAI எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ள அளவை விட உப்பும் கொழுப்புச் சத்தும் மிக அதிக அளவில் இருப்பதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் கூறியுள்ளது. இதற்கிடையில் பள்ளி வளாகங்களில் இருந்து 50 மீட்டர் சுற்றளவு வரை சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்குத்தீனி வகைகள்
 

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பெரும்பாலான நொறுக்குத்தீனிகளில் ஆபத்தான அளவில் உப்பும் கொழுப்புச்சத்தும் கலந்திருப்பதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

ஆய்வக சோதனையில் இது தெரியவந்துள்ளதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது. FSSAI எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ள அளவை விட உப்பும் கொழுப்புச் சத்தும் மிக அதிக அளவில் இருப்பதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் கூறியுள்ளது.

இதற்கிடையில் பள்ளி வளாகங்களில் இருந்து 50 மீட்டர் சுற்றளவு வரை சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்குத்தீனி வகைகள் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக FSSAI தெரிவித்துள்ளது .

https://www.A1TamilNews.com