இயற்கையான முறையில் இரும்புச் சத்தை அதிகரிக்கும் கேழ்வரகு அடை!

தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு – 2 கப் பெரிய வெங்காயம் – 1 காய்ந்த மிளகாய் – 3 சீரகம் – 1 டீஸ்பூன் வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் பெருங்காய்த்தூள் – 1 சிட்டிகை கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 5 டீஸ்பூன் செய்முறை: சீரகம், வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் இவற்றை மிக்சியில் கொரகொரப்பாக
 

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 2 கப்
பெரிய வெங்காயம் – 1
காய்ந்த மிளகாய் – 3
சீரகம் – 1 டீஸ்பூன்
வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 5 டீஸ்பூன்

செய்முறை:

சீரகம், வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் இவற்றை மிக்சியில் கொரகொரப்பாக பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, தேவையான அளவு உப்பு,பொடியாக அரிந்த வெங்காயம், பொடித்த கலவை இவற்றைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காய்த்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து, மாவில் சூடாகச் சேர்க்கவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.

கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு வட்டமாக அடையைத் தட்டவும். தோசைக் கல்லை மிதமான தீயில் வைத்து இருபுறமும் அடையைச் சுற்றி எண்ணெய் ஊற்றி வேக விடவும். ஆரோக்கியமான , சுவையான கேழ்வரகு அடை தயார்.கேழ்வரகில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து நமது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

A1TamilNews.com