சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் சமைக்காத இயற்கை உணவுகள்!

உணவுப்பொருட்களை சமைக்காமல் அப்படியே சாப்பிடுவதால் அதன் சத்து அப்படியே முழுமையாக நம் உடலுக்கு கிடைக்கிறது. சமைக்காத இயற்கை உணவுகளே உடலின் நோய்களை விரட்டும் சத்தான உணவுகள். இந்த உணவுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல வயதானவர்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கும் கூட பிடித்தமானவையே. இவற்றை செய்வது எளிதானது. சிவப்பு அவலை சுத்தம் செய்து, நீரில் கழுவி, அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். வெங்காயம், காரட், தக்காளி, கோஸ், குடமிளகாய், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை இவைகளை பொடிப் பொடியாக
 

ணவுப்பொருட்களை சமைக்காமல் அப்படியே சாப்பிடுவதால் அதன் சத்து அப்படியே முழுமையாக நம் உடலுக்கு கிடைக்கிறது. சமைக்காத இயற்கை உணவுகளே உடலின் நோய்களை விரட்டும் சத்தான உணவுகள்.

இந்த உணவுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல வயதானவர்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கும் கூட பிடித்தமானவையே. இவற்றை செய்வது எளிதானது.

சிவப்பு அவலை சுத்தம் செய்து, நீரில் கழுவி, அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். வெங்காயம், காரட், தக்காளி, கோஸ், குடமிளகாய், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை இவைகளை பொடிப் பொடியாக நறுக்க வேண்டும். இஞ்சியை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஊறிய அவலுடன் எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றுடன் தேங்காய் துருவல், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து எலுமிச்சை சாறு விட்டு கலந்து விட வேண்டும்.

இந்த உணவை சர்க்கரை நோயாளிகள் மதிய உணவாக சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம், பைல்ஸ் பிரச்சினை உள்ளவர்கள், அதிக உடல் எடை உடையவர்கள், குடல் புண், வயிற்றுவலி, மூட்டுவலி இருப்பவர்கள் என அனைவருமே தினசரி எடுத்துக் கொள்ளலாம்.

A1TamilNews.com