கோவில் வெளிப் பிரகாரத்தை எத்தனை முறை வலம் வர வேண்டும்?என்ன பலன்கள்?

கோவிலுக்கு தினசரி செல்பவர்களுக்கு கூட மூலவர் மற்ற தெய்வங்களை எத்தனை முறை வலம் வர வேண்டும் என்று குழப்பங்கள் உண்டு. பொதுவாக மூலவருக்கும், அம்மன் சந்நிதிகளிலும் அபிஷேகம் நடக்கும் போதும், திரையிட்டு இருக்கும் போது கோவில் உட்பிரகாரத்தில் வலம் வரக் கூடாது என்பது ஆன்மீக அன்பர்கள் கருத்து. எந்த தெய்வத்தை வணங்கினாலும் அவரவர் தேவைக்களுக்கும், பிரச்சனைகளுக்கும் ஏற்ப தீபமேற்றுவதும் அவசியம். அப்படி ஆலய வழிபாட்டில் வேண்டிய தீபங்களும், வலம் வரும் முறைகளும், பயன்களும் தீபங்கள் ஏற்றும் முறையும்
 

கோவிலுக்கு தினசரி செல்பவர்களுக்கு கூட மூலவர் மற்ற தெய்வங்களை எத்தனை முறை வலம் வர வேண்டும் என்று குழப்பங்கள் உண்டு.

பொதுவாக மூலவருக்கும், அம்மன் சந்நிதிகளிலும் அபிஷேகம் நடக்கும் போதும், திரையிட்டு இருக்கும் போது கோவில் உட்பிரகாரத்தில் வலம் வரக் கூடாது என்பது ஆன்மீக அன்பர்கள் கருத்து.

எந்த தெய்வத்தை வணங்கினாலும் அவரவர் தேவைக்களுக்கும், பிரச்சனைகளுக்கும் ஏற்ப தீபமேற்றுவதும் அவசியம். அப்படி ஆலய வழிபாட்டில் வேண்டிய தீபங்களும், வலம் வரும் முறைகளும், பயன்களும் தீபங்கள் ஏற்றும் முறையும் பலன்களும்

ராகு தோஷம் – 21 தீபங்கள்
சனி தோஷம் – 9 தீபங்கள்
குரு தோஷம் – 33 தீபங்கள்
துர்க்கைக்கு – 9 தீபங்கள்
ஈஸ்வரனுக்கு – 11 தீபங்கள்
திருமண தோஷம் – 21 தீபங்கள்
புத்திர தோஷம் – 51 தீபங்கள்
சர்ப்ப தோஷம் – 48 தீபங்கள்
காலசர்ப்ப தோஷம்- 21 தீபங்கள்
களத்திர தோஷம் -108 தீபங்கள்
எத்தனை முறை தெய்வங்களை வலம் வரலாம்?
விநாயகர் – 1 அல்லது 3 முறை
கதிரவன் (சூரியன்) – 2 முறை
சிவபெருமான் – 3, 5, 7 என ஒற்றைப்படையில் வலம் வருவது நலம் பயக்கும்
முருகன் – 6முறை
தட்சிணா மூர்த்தி – 3 முறை
சோமாஸ் சுந்தர் – 3 முறை
அம்பாள் – 4, 6, 8 என இரட்டைப்படையில் வலம் வருவது நலம் பயக்கும்
விஷ்ணு – 4 முறை
தாயார் – 4 முறை
அரசமரம் – 7 முறை
அனுமான் – 11 அல்லது 16 முறை
நவக்கிரகம் – 3 அல்லது 9

A1TamilNews.com