இதையெல்லாம் மறக்காமல் கடைப்பிடியுங்கள்!செக்ஸை கொண்டாடுங்கள்!!

செக்ஸ்..செக்ஸை நாம் எப்போது முழுமையாக அனுபவிக்கிறோம் ? நம் துணைக்கு எப்போது நம்மால் முழுமையானதொரு உடலுறவை கொடுக்க முடிகிறது ? எப்போது அவர்கள் திருப்தியடைகிறார்கள் ?நம்மால் அவர்களை திருப்திப்படுத்த முடிகிறதா ? செக்ஸ் என்பது வெறுமனே இரு உடல்களின் சங்கமம் மட்டுமல்ல. இரு மனிதர்களின், அவர்களின் விருப்பங்களின், உணர்வுகளின் சேர்க்கை. சேர்க்கையின் போது மட்டுமல்ல மற்ற சமயங்களிலும் அவர்களின் செயல்கள் ரசிக்கும்படி இருந்தால் மட்டுமே அவர்கள் தங்களின் உடலுறவை பூரணமாக கொண்டாட முடியும். உதாரணமாக, வீட்டில் எப்போதும்
 

செக்ஸ்..செக்ஸை நாம் எப்போது முழுமையாக அனுபவிக்கிறோம் ? நம் துணைக்கு எப்போது நம்மால் முழுமையானதொரு உடலுறவை கொடுக்க முடிகிறது ? எப்போது அவர்கள் திருப்தியடைகிறார்கள் ?நம்மால் அவர்களை திருப்திப்படுத்த முடிகிறதா ?

செக்ஸ் என்பது வெறுமனே இரு உடல்களின் சங்கமம் மட்டுமல்ல. இரு மனிதர்களின், அவர்களின் விருப்பங்களின், உணர்வுகளின் சேர்க்கை. சேர்க்கையின் போது மட்டுமல்ல மற்ற சமயங்களிலும் அவர்களின் செயல்கள் ரசிக்கும்படி இருந்தால் மட்டுமே அவர்கள் தங்களின் உடலுறவை பூரணமாக கொண்டாட முடியும்.

உதாரணமாக, வீட்டில் எப்போதும் அழுக்கு நைட்டியுடன் மனைவி வலம் வந்து கொண்டிருக்கிறாள் என்று வைத்துக் கொள்ளுங்கள், இரவில் அவள் எவ்வளவு ஈடுபாடு காட்டினாலும் அந்த கணவனுக்கு முழு திருப்தி ஏற்படாது, அவர்கள் வைத்துக் கொள்ளும் செக்ஸும் முழுமை பெறாது.

மனிதர்களுக்கு மேனர்ஸ் & டீஸென்ஸி ரொம்ப முக்கியம். அவை செக்ஸில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் சாதாரணம் என்று நினைத்து செய்யும் ச்சின்ன ச்சின்ன விஷயங்கள் கூட நம் துணைக்கு அருவெறுப்பை ஏற்படுத்தக்கூடும். அதுவே அவர்களுக்கு செக்ஸின் மீது ஆர்வமில்லாமல் செய்யக்கூடும்.

சாதாரண விஷயத்திற்குக் கூட கத்துவது, சாப்பிடும்போது மேனர்ஸே இல்லாமல் க்ரைண்டரில் கருங்கற்களை போட்டு சுற்ற விட்டது போல் சத்தம் எழுப்புவது, எங்கு எந்த திண்பண்டத்தை பார்த்தாலும் டேஸ்ட் பார்க்கிறேன் என்று எடுத்து வாயில் போட்டுக் கொள்வது, மோசமான ட்ரெஸ்ஸிங் சென்ஸ், வீட்டில் பெண்கள் எப்போதும் கொண்டை போட்டவாறு வலம் வருவது, எந்நேரமும் நைட்டியுடனே சுற்றிக் கொண்டிருப்பது.. இவையெல்லாம் ரொம்ப சாதாரண விஷயமாக தோன்றலாம்.

ஆனால், இதுவே உங்கள் துணைக்கு உங்கள் மீது அருவெறுப்பு ஏற்படக் காரணமாக இருக்கும். வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். அதே சமயம் உடலுறவின் போதும் அவர்கள் முழு திருப்தி அடைய மாட்டார்கள். நிமிடங்களின் எண்ணிக்கை கூட்டினாலும் பலனிருக்காது. உங்களிடமும் இதுபோல் ச்சின்ன ச்சின்ன மேனர்லஸ் பழக்கங்கள் இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் துணையிடமும் அபாரமான மாற்றத்தை உணர்வீர்கள். செக்ஸை கொண்டாடுங்கள்.

– சசிகலா

A1TamilNews.com