உடலில் ஆரோக்கியத்தை பலப்படுத்த தினசரி 3 நிமிஷம் இதைச் செய்யுங்க!

ஊரடங்கில் வீட்டில் சோபா அல்லது நாற்காலியில் உட்கார்ந்தபடியே டிவி, மொபைல், லேப்டாப் பார்த்துக் கொண்டிருப்பவர்களே உஷார் .உடலின் ஆரோக்கியம் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து கொண்டிருக்கிறது. ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சியும் செய்ய வேண்டாம். காலை எழுந்தவுடன் யோகா, தியானம், வாகிங், ஜாகிங்கும் வேண்டாம். தினசரி காலை எழுந்தவுடன் 3 நிமிடங்கள் தோப்புக்கரணம் போட்டாலே போதுமானது. அதனால் தான் நம் முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்தார்கள். காது மடல்களைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடும்
 

ரடங்கில் வீட்டில் சோபா அல்லது நாற்காலியில் உட்கார்ந்தபடியே டிவி, மொபைல், லேப்டாப் பார்த்துக் கொண்டிருப்பவர்களே உஷார் .உடலின் ஆரோக்கியம் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து கொண்டிருக்கிறது. ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சியும் செய்ய வேண்டாம். காலை எழுந்தவுடன் யோகா, தியானம், வாகிங், ஜாகிங்கும் வேண்டாம்.

தினசரி காலை எழுந்தவுடன் 3 நிமிடங்கள் தோப்புக்கரணம் போட்டாலே போதுமானது. அதனால் தான் நம் முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்தார்கள்.

காது மடல்களைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடும் போது உடலின் எல்லா உறுப்புகளும் இயக்கம் பெறுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதனால் உடல் இயக்கம் சீர்படும். முதலில் தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து கொண்டு தோப்புக்கரணம் போட பயிற்சி எடுக்க வேண்டும்.

சிறிது காலம் கழித்து கால்களைச் சேர்த்து வைத்து போட சுலபமாக போட்டுவிடலாம்.
தோப்புக்கரணத்தில் உட்காரும்போது மூச்சை உள்ளிழுத்து எழுந்திருக்கும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.

இதன் மூலம் தண்டுவடத்தில் சக்தி குவிக்கப்படுகிறது. இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. தினசரி மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்து வந்தால் உடலுக்கு மற்ற எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை.

A1TamilNews.com