அகத்தை சீராக்கும் சீரகத்தின் அற்புதமான பயன்பாடுகள்!

உடலை அழகாக்க பலவிதமான க்ரீம்களை உபயோகப்படுத்துகிறோம். அதே போல் உள்ளுறுப்புக்களை சீராக்க சீரகம் பெருமளவில் உதவி செய்கிறது. சீரகத்தையும், ஏலக்காயையும் சம அளவு எடுத்து, வாசம் வறும் வரை மிதமான தீயில் வறுத்து, பொடி செய்து, ஒவ்வொரு வேளையும் உணவிற்குப் பின் கால் டீஸ்பூன் தொடர்ந்து சாப்பிட்டு வர வயிறு உப்பசம் தீரும். நெஞ்செரிச்சல் உள்ளவர்களும், உணவு செரிமானம் ஆகாமல் இருப்பவர்களும் சாதாரண தண்ணீருக்குப் பதில், இளஞ்சூடான சீரகத் தண்ணீரை குடித்து வரலாம். சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச்
 

டலை அழகாக்க பலவிதமான க்ரீம்களை உபயோகப்படுத்துகிறோம். அதே போல் உள்ளுறுப்புக்களை சீராக்க சீரகம் பெருமளவில் உதவி செய்கிறது.

சீரகத்தையும், ஏலக்காயையும் சம அளவு எடுத்து, வாசம் வறும் வரை மிதமான தீயில் வறுத்து, பொடி செய்து, ஒவ்வொரு வேளையும் உணவிற்குப் பின் கால் டீஸ்பூன் தொடர்ந்து சாப்பிட்டு வர வயிறு உப்பசம் தீரும்.

நெஞ்செரிச்சல் உள்ளவர்களும், உணவு செரிமானம் ஆகாமல் இருப்பவர்களும் சாதாரண தண்ணீருக்குப் பதில், இளஞ்சூடான சீரகத் தண்ணீரை குடித்து வரலாம்.
சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டுவர, எரிச்சலுடன் கூடிய வயிற்றுப் புண்கள், அல்சர் நோயிலிருந்து விடுபடலாம்.

வயிற்றெரிச்சல், அமிலத்தன்மை, குமட்டல், அஜீரண கோளாறுகளிலிருந்து விடுபட சீரக தண்ணீர் உதவும். இஞ்சியை தோல் சீவி நிழலில் உலர்த்தி எடுத்துக் கொண்டு அதனுடன் அதே அளவுக்கு சீரகத்தை எடுத்து, இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து அரை டீஸ்பூன் அளவுக்கு காலை வேளையில் சாப்பிட, மைக்ரேன் தலைவலி படிப்படியாகக் குறைவதைக் காணலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்து வந்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவை சீர்செய்யலாம். சீரகத்தில் இருக்கும் வைட்டமின் இ, இளமையாக இருக்க உதவுகிறது. முகத்தில் வயதானால் தோன்றும் சுருக்கங்களை வரவிடாமல் தடுக்கிறது.

A1TamilNews.com