மது குடித்தால் நினைவாற்றலை அதிகரிக்குதாம்! ஆய்வில் தகவல்!!

மது பாட்டில்களிலே ஒட்டப்பட்டிருக்கும் ஒரு வாசகம் ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு’. இந்த வாசகம் பல இடங்களில் எழுதப்பட்டிருக்கும், சொல்லப்பட்டும் ஒரு வாசகம் தான். ஆனால், மதுவில் இருக்கக்கூடிய ஆல்கஹால் நினைவாற்றலை அதிகரிப்பதாக சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள எஸ்டர் பல்கலைக்கழகம் சமீபத்தில் 88 மது பிரியர்களிடம் ஆய்வு நடத்தியது. 88 பேரில் அதிகளவு மது குடிப்பவர்கள் , சிறிதளவு மது அருந்துபவர்கள் என்று இரண்டு ரகமாக பிரித்து
 

மது பாட்டில்களிலே ஒட்டப்பட்டிருக்கும் ஒரு வாசகம் ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு’. இந்த வாசகம் பல இடங்களில் எழுதப்பட்டிருக்கும், சொல்லப்பட்டும் ஒரு வாசகம் தான்.

ஆனால், மதுவில் இருக்கக்கூடிய ஆல்கஹால் நினைவாற்றலை அதிகரிப்பதாக சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள எஸ்டர் பல்கலைக்கழகம் சமீபத்தில் 88 மது பிரியர்களிடம் ஆய்வு நடத்தியது.

88 பேரில் அதிகளவு மது குடிப்பவர்கள் , சிறிதளவு மது அருந்துபவர்கள் என்று இரண்டு ரகமாக பிரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் விரும்பி ஆர்வத்துடன் மது குடிப்பவர்களுக்கு நினைவாற்றல் சக்தி அதிகரித்து இருந்தது கண்டறியப்பட்டது.மேலும் அதிக அளவு மது குடித்தவர்களின் உடல் நலம், மனநலம் மற்றும் நினைவாற்றல் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

A1TamilNews.com