ரஜினியுடன் கூட்டணியா? அமைச்சர் கடம்பூர் ராஜூ சொல்வதைக் கேளுங்க!
இந்த நிலையில் கோவில்பட்டி அருகே கழுகுமலை என்ற இடத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், “அன்று மேடையில் சொன்னது போலவே, நான் ரஜினி ரசிகன்தான். எம்ஜிஆர் படங்களுக்குப் பிறகு நான் ரஜினி படங்களைத்தான் அதிகமாக ரசித்துப் பார்த்து வருகிறேன்.
அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது. அது அவரது தனிப்பட்ட செயல்பாடு. அதை யாரும் கேள்வி கேட்கவோ, தடுக்கவோ முடியாது. அவர் கட்சி ஆரம்பித்தால், அவருடன் அதிமுக கூட்டணி சேருமா என்று பலரும் கேட்டு வருகின்றனர். அதுபற்றி இப்போதே ஏதும் சொல்ல முடியாது. பொறுத்திருந்து பாருங்கள். நேரம் வரும்போது அதுகுறித்து முடிவெடுக்கப்படும்,” என்றார்.
– வணக்கம் இந்தியா