தமிழர்களின் அரசியல் அடையாளம் ப.சிதம்பரம் – கவிஞர் வைரமுத்து!

டெல்லி: ஐஎன்எக்ஸ் வழக்கில் நீதிமன்ற காவலில் இருக்கும் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ நீதிமன்ற அறையில் கவிஞர் வைரமுத்து, பேராயர் எஸ்ரா சற்குணம் சந்தித்துப் பேசினார்கள். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையொட்டி, சி.பி.ஐ நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அவருக்கு மேலும் 15 நாட்கள் காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேச கவிஞர் வைரமுத்து மற்றும் பேராயர் எஸ்ரா.சற்குணம் ஆகியோர் நீதிபதியிடம் அனுமதி கேட்டனர். நீதிபதி கோர்ட் அறையில் சந்திக்க அனுமதி தந்தார். அங்கு இருவரும்
 

டெல்லி: ஐஎன்எக்ஸ் வழக்கில் நீதிமன்ற காவலில் இருக்கும்  ப.சிதம்பரத்தை சி.பி.ஐ நீதிமன்ற அறையில் கவிஞர் வைரமுத்து, பேராயர் எஸ்ரா சற்குணம் சந்தித்துப் பேசினார்கள்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையொட்டி, சி.பி.ஐ நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அவருக்கு மேலும் 15 நாட்கள் காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேச கவிஞர் வைரமுத்து மற்றும் பேராயர் எஸ்ரா.சற்குணம் ஆகியோர் நீதிபதியிடம் அனுமதி கேட்டனர். நீதிபதி கோர்ட் அறையில் சந்திக்க அனுமதி தந்தார். அங்கு இருவரும் ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து,

“ப.சிதம்பரத்தை கண்டதும் கண் கலங்கினேன். அவர் மன உறுதியுடன் இருந்தார். சிதம்பரத்தின் உடல் எடை குறைந்திருக்கலாம், நிறம் குறைந்திருக்கலாம், ஆனால் அவருடைய மனதிடம் குறையாமல் உள்ளது.

நிதி அமைச்சராக 9 தடவை ப.சிதம்பரம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த போதும் , மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போதும் நான் டெல்லி வந்து பார்க்கவில்லை.  அவர் என்னுடைய நண்பர். இந்தியாவுக்கு வெளியே தமிழர்களின் அரசியல் அடையாளமாக திகழ்ந்தவர்.

சிதம்பரத்தின் வயது, உடல்நிலை மற்றும் அவருடைய தொண்டுகளைக் கருதி நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கும் என்று நம்புவதாக,” கூறினார்.

– வணக்கம் இந்தியா