விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! #StephenHawking

லண்டன்: உலகின் தலைசிறந்த அறிவியலாளர் என போற்றப்படும் ஸ்டீபன் ஹாக்கிங் இலண்டனில் சற்றுமுன் காலமானார். 76 வயதான இவர் குவாண்டம் தியரி மற்றூம் பிளாக் ஹோல் தியரியை விளக்கி பெரும் புகழ்பெற்றவர். நரம்பு மற்றும் தசை குறைபாட்டால் 21 வயதில் முடங்கிப் போன இவர் தொடர்ந்து தனது அறிவாற்றலால பல அறிவியல் சாதனைகளை புரிந்தவர். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் 1963 ம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகரான
 

லண்டன்: உலகின் தலைசிறந்த அறிவியலாளர் என போற்றப்படும் ஸ்டீபன் ஹாக்கிங் இலண்டனில் சற்றுமுன் காலமானார்.

76 வயதான இவர் குவாண்டம் தியரி மற்றூம் பிளாக் ஹோல் தியரியை விளக்கி பெரும் புகழ்பெற்றவர். நரம்பு மற்றும் தசை குறைபாட்டால் 21 வயதில் முடங்கிப் போன இவர் தொடர்ந்து தனது அறிவாற்றலால பல அறிவியல் சாதனைகளை புரிந்தவர்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் 1963 ம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகரான புத்திகூர்மை உடையவர் என போற்றப்பட்டவர் ஸ்டீபன் ஹாக்கிங். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானார்.