ப. சிதம்பரம் ஜாமினில் விடுதலை.. ஆனாலும் வெளியே வர முடியாது!

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமின் கிடைத்துள்ளது. 1 லட்சம் ரூபாய் பிணைத் தொகை கட்ட வேண்டும்.வெளிநாடு செல்லக் கூடாது, பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் பானுமதி, போபண்ணா, ரிஷிகேஷ் ராய் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 61 நாட்கள் சிறை வாசத்திற்குப் பிறகு ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைத்துள்ளது. ஆனால், அமலாக்கத்துறை சார்பில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக
 

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமின் கிடைத்துள்ளது. 1 லட்சம் ரூபாய் பிணைத் தொகை கட்ட வேண்டும்.வெளிநாடு செல்லக் கூடாது,  பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் பானுமதி, போபண்ணா, ரிஷிகேஷ் ராய் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 61 நாட்கள் சிறை வாசத்திற்குப் பிறகு ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைத்துள்ளது.

ஆனால், அமலாக்கத்துறை சார்பில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் இன்னும் ஜாமின் கிடைக்கவில்லை.  அதனால் இன்னும் திகார் ஜெயிலிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தீபாவளிக்குள் அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாமின் கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– வணக்கம் இந்தியா