மண்புழு அரசு… மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!

முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “ மண் புழு அரசு” என்று கடுமையாகத் தாக்கியுள்ளார். குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிராக பெண்கள் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். அவர்களை அதிமுக அரசு கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கையை கண்டித்து மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது, ”அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதற்கு இது மேலும் ஓர் உதாரணம். சென்னை பெசண்ட் நகரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்
 

முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “ மண் புழு அரசு” என்று கடுமையாகத் தாக்கியுள்ளார்.

குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிராக பெண்கள் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். அவர்களை அதிமுக அரசு கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கையை கண்டித்து மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது,

”அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதற்கு இது மேலும் ஓர் உதாரணம். சென்னை பெசண்ட் நகரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த ஆறு பேரை எடப்பாடியின் காவல்துறை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைக் கூட பயன்படுத்தத் தடைவிதிக்கும் தரங்கெட்ட ஆட்சி இது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்கள் மீதான வழக்கும் திரும்பப் பெறப்பட வேண்டும்.

மண்புழு அரசு மனித உரிமைகளை மதிக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

மத்திய பாஜக அரசுடன் எல்லா விசயத்திலும் இணக்கமாக நடந்து கொள்ளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை மண்புழு அரசு என்று மு.க.ஸ்டாலின் சாடியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

www.vanakamindia.com