கமல் ஹாசனை சந்தித்த மு.க.ஸ்டாலின்… ரஜினியுடன் கூட்டணி விரிசலா?

அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் ஓய்வு பெற்று வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். கமல் ஹாசனின் வலது காலில் வைக்கப்பட்டிருந்த உலோக தகட்டை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை நடந்தது. அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மு.க.ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் சுப.வீரபாண்டியன் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். இந்த சந்திப்புக்குப் பின் “நண்பர் ‘கலைஞானி’ கமல்ஹாசன் அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தேன்.விரைவில் அவர்
 

றுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் ஓய்வு பெற்று வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.

கமல் ஹாசனின் வலது காலில் வைக்கப்பட்டிருந்த உலோக தகட்டை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை நடந்தது. அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மு.க.ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் சுப.வீரபாண்டியன் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.

இந்த சந்திப்புக்குப் பின்  “நண்பர் ‘கலைஞானி’ கமல்ஹாசன் அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தேன்.விரைவில் அவர் முழுநலம் பெற வேண்டுமென என் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் மற்றும் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் மருத்துவமனையில் கமல் ஹாசனை சந்தித்து நலம் விசாரித்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணிக்காக கமல் ஹாசனை திமுக தலைவர் சந்தித்துள்ளார் என்று கூறியுள்ளார். ரஜினியும் கமலும் இணைந்து கூட்டணி அமைத்தால் திமுக மற்றும் அதிமுகவுக்கு சவாலாக மூன்றாவது அணி வலுவாக அமைந்து விடும் என்பதால், ஜெயக்குமார் இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார் என்று கருதப் படுகிறது.

மேலும், திமுகவும் கமல் ஹாசனை தங்கள் பக்கம் இழுப்பதற்கு முயற்சி செய்வதாகவே தகவல்கள் தெரிவிக்கிறது. இயக்குனர் எஸ்.பி.முத்துராமனின் தம்பியுமான சுப.வீரபாண்டியன் இந்த சந்திப்பில் கலந்து கொண்டது அதை உறுதி செய்வதாகவும் தெரிகிறது.

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி, கமல் இருவருமே ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கமல் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று நடிகை ஸ்ரீப்ரியா சொல்ல, அது தேர்தல் நேரத்தில் முடிவு செய்ய வேண்டியது என்று ரஜினி பதிலளித்து இருந்தார்.

ரஜினி – கமல் கூட்டணி ஏற்பட்டுவிடக் கூடாது என்று அதிமுக, திமுக இரு கட்சிகளுமே விரும்புவதாகவே தெரிகிறது.

https://www.A1TamilNews.com