மனைவியைக் காணோம்… பொள்ளாச்சி கொடூரங்கள் குறித்து கணவனின் குமுறல்!

பொள்ளாச்சி: 200 இளம்பெண்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பொள்ளாச்சி சம்பவத்தில் இளம் மனைவி காணாமல் போய்விட்டதாக கணவன் குமுறியுள்ளார். பக்கோத்திபாளையம் என்ற ஊரைச் சார்ந்த மணி கணேஷ் என்பவர் 2016 ஆண்டில் டிஜிபியிடம், தன் மனைவிக்கு ஒரு கூட்டம் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் காவல்துறை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மனைவியையும் இது வரையிலும் காணவில்லை என்று ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு கூறியுள்ளார். மேலும கணேஷ் கூறுகையில், “கோட்டூரில் பணிபுரிந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் இந்த
 

பொள்ளாச்சி: 200 இளம்பெண்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பொள்ளாச்சி சம்பவத்தில் இளம் மனைவி காணாமல் போய்விட்டதாக கணவன் குமுறியுள்ளார்.

பக்கோத்திபாளையம் என்ற ஊரைச் சார்ந்த மணி கணேஷ் என்பவர் 2016 ஆண்டில் டிஜிபியிடம், தன் மனைவிக்கு ஒரு கூட்டம் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் காவல்துறை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மனைவியையும் இது வரையிலும் காணவில்லை என்று ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு கூறியுள்ளார்.

மேலும கணேஷ் கூறுகையில், “கோட்டூரில் பணிபுரிந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் இந்த பாலியல் வன்முறைக் கூட்டத்திற்கு உதவி செய்தார். தற்போது குற்றம் சாட்டப்பட்ட வசந்த்குமாரின் உறவினர் மீது புகார் அளித்தேன். என் மனைவி காணாமல் போனது பற்றி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இந்த சப் இன்ஸ்பெக்டர் எஃப் ஐ ஆர் போடாமல் தடுத்து, சமூக சேவைப் பதிவு (community service register report) உத்தரவைப் பிறப்பிக்க வைத்தார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள கும்பல் நெடுங்காலமாக பொள்ளாச்சிப் பகுதியில் இத்தகைய பாலியல் குற்றங்களை செய்து வருகிறார்கள். என்னுடைய மனைவி காணாமல் போனது முதல் 12 வயது மகனையும் 11 வயது மகளையும் தனியாக கவனித்து வருகிறேன்,” என்று கணேஷ் அந்த ஆங்கிலப் பத்திரிக்கைக்கு தொலைபேசி மூலம் கூறியுள்ளார்.

பொள்ளாச்சியில் இளம் மனைவியும் பாலியல் வன்முறை கும்பலிடம் சிக்கியுள்ளது மூலம், இந்த வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்று தெரிகிறது. காணாமல் போன பெண்ணுக்கு என்ன ஆனது என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.