யூ-டியூப்பை பார்த்து ஏ.டி.எம்மை கொள்ளயடித்த மாணவர்கள்! டிஜிட்டல் இந்தியா!!

காஞ்சிபுரம்: யூ டியூப் வீடியோ பார்த்து ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக்கால யூத்துகளையும் யூ டியூப்பையும் பிரிக்கவே முடியாது. இன்னும் சொல்லப் போனால் இளைஞர்கள் மட்டுமின்றி நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்களும் யூ – டியூப்பை பயன்படுத்துபவர்களே. விதவிதமான சமையல் முதல் வெடிகுண்டு தயாரிப்பு வரை எல்லாவிதமான வீடியோக்களையும் யூ-டியூப்பில் காணலாம். இதில் பதிவேற்றப்படும் வீடியோக்களுக்கு எந்த தணிக்கையும் கிடையாது. இன்றைய டிஜிட்டல் உலகில் செல்போன்கள் வழியே நமது
 

காஞ்சிபுரம்:  யூ டியூப் வீடியோ பார்த்து ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக்கால யூத்துகளையும் யூ டியூப்பையும் பிரிக்கவே முடியாது. இன்னும் சொல்லப் போனால் இளைஞர்கள் மட்டுமின்றி நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்களும் யூ – டியூப்பை பயன்படுத்துபவர்களே. விதவிதமான சமையல் முதல் வெடிகுண்டு தயாரிப்பு வரை எல்லாவிதமான வீடியோக்களையும் யூ-டியூப்பில் காணலாம்.

இதில் பதிவேற்றப்படும் வீடியோக்களுக்கு எந்த தணிக்கையும் கிடையாது. இன்றைய டிஜிட்டல் உலகில் செல்போன்கள் வழியே நமது உள்ளங்கைக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றன யூ-டியூப் வீடியோக்கள். தொடக்கத்தில் வீடியோ பகிர்தலுக்கும் பொழுது போக்குக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்ட யூ-டியூப் தற்போது சில குற்றச் செயல்களுக்கும் பயன்படுத்தப்படுவதுதான் வேதனை.

இதற்கு காஞ்சிபுரம் மாவட்டம் கீழ் படப்பை கரசங்கால் என்னுமிடத்தில் இருக்கும் ஏ.டி.எம்.மில் நடைபெற்றுள்ள கொள்ளை முயற்சியே உதாரணம். கீழ் படப்பை கரசங்காலில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்த இரண்டு பேர் பணம் எடுக்கும் இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளனர். அதுகுறித்த சமிக்கை மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு கிடைத்துள்ளது.

அங்கிருந்த அதிகாரிகள் கொள்ளை முயற்சி குறித்து ஓட்டேரி மற்றும் மணிமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற காவலர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயன்‌ற 2 இளைஞர்களை கையும் களவுமாக பிடித்தனர்.

அவர்கள் இருவரும் தனியார் கல்லூரி மாணவர்கள் என்பதும், யூ-டியூப்பை பார்த்து ஏ.டி.எம்.மில் கொள்ளை அடிப்பது எப்படி என்பதை கற்றுக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. இரண்டு மாணவர்களையும் மணிமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர்.