தூத்துக்குடி மாவட்ட கொலையில் போலீஸ் இன்பெஸ்க்டர் மீது வழக்கு! சிபிசிஐடி-க்கு மாற்றம்!! 

 

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டார்மடத்தில் செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சொக்கன்குடியிருப்பில் வசித்து வந்த 30 வயது செல்வன், அடித்து கொலை செய்யப்பட்டு திசையன்விளை அருகே காட்டில் வீசப்பட்டுள்ளார். அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திருமணவேலுக்கும் செல்வனுக்கும் சொத்து விவகாரம் தொடர்பாக முன்பகை இருந்துள்ளது. திருமணவேலும் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனும் செல்வனை கொலை செய்துள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இபிகோ பிரிவு 302, 364, 120b, 148 மற்றும் 147 கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக செல்வன் உடலை பெற்றுக்கொள்ள மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தனிப்படை அமைத்து குற்றவாளிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடந்தது. திருமணவேலும் அவருடைய சகோதரர் முத்துக்கிருஷ்ணனும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்டைந்துள்ளனர். திருமணவேல்அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நெல்லை சரக டிஐஜி பிரவீண்குமார் அபினபு அறிவித்துள்ளார்.

A1TamilNews