லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகன் நீதிமன்றத்தில் சரண்!

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி திருவாரூர் முருகன் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அக்டோபர் 2ஆம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியின் சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பிரபல வங்கிக் கொள்ளையன் திருவாரூர் முருகன் லலிதா ஜுவல்லரியில் கைவரிசை காட்டியது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிய காவல்துறையினர் மணிகண்டன் என்பவரை அக்டோபர் 3ஆம் தேதி கைது செய்தனர்.
 

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி திருவாரூர் முருகன் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

அக்டோபர் 2ஆம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியின் சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பிரபல வங்கிக் கொள்ளையன் திருவாரூர் முருகன் லலிதா ஜுவல்லரியில் கைவரிசை காட்டியது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிய காவல்துறையினர் மணிகண்டன் என்பவரை அக்டோபர் 3ஆம் தேதி கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மணிகண்டனோடு இருசக்கர வாகனத்தில் வந்த சுரேஷ் தப்பியோடிவிட்டார்.

இவர் திருவாரூர் முருகனின் சகோதரி கனகவல்லியின் மகன் ஆவார். இதனையடுத்து கனகவல்லியை கைது செய்த‌ காவல்துறையினர் சுரேஷை தேடி வந்த நிலையில் அவர் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.