நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும்! நீதிமன்றம் அதிரடி!

நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூருவில் பிடதியில் நித்தியானந்தாவின் தியான பீட ஆசிரமம் அமைக்கப்பட்டுள்ளது. நித்தியானந்தாவின் இந்த ஆசிரமத்திற்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் கிளைகள் இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்தியானந்தா செக்ஸ் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.இந்த வழக்கில் இருந்து கர்நாடக ஐகோர்ட் ஜாமீன் வழங்கியிருந்தது. தற்சமயம் நித்தியானந்தா வெளிநாட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஏற்கனவே வழங்கியிருந்த ஜாமீனை ரத்து செய்வதாகவும், உடனடியாக நித்தியானந்தாவை
 

நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூருவில் பிடதியில் நித்தியானந்தாவின் தியான பீட ஆசிரமம் அமைக்கப்பட்டுள்ளது. நித்தியானந்தாவின் இந்த ஆசிரமத்திற்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் கிளைகள் இருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்தியானந்தா செக்ஸ் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.இந்த வழக்கில் இருந்து கர்நாடக ஐகோர்ட் ஜாமீன் வழங்கியிருந்தது.

தற்சமயம் நித்தியானந்தா வெளிநாட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஏற்கனவே வழங்கியிருந்த ஜாமீனை ரத்து செய்வதாகவும், உடனடியாக நித்தியானந்தாவை கைது செய்யவும் கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

http://A1TamilNews