உன்னாவ் வழக்கு: குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், பாரதிய ஜனதாவிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரில், கடந்த 2017 ஆம் ஆண்டு 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் உள்பட இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்ய முயற்சித்ததாக செங்கார் மீது மற்றொரு வழக்கும் பதியப்பட்டது. இதன் எதிரொலிலாக குல்தீப் செங்கார் பாரதிய ஜனதாவிலிருந்து
 

ன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், பாரதிய ஜனதாவிலிருந்து ‌நீக்கப்பட்ட எம்.எல்‌.ஏ‌ குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரில், கடந்த 2017 ஆம் ஆண்டு 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் உள்பட இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்ய முயற்சித்ததாக செங்கார் மீது மற்றொரு வழக்கும் பதியப்பட்டது.

இதன் எதிரொலிலாக குல்தீப் செங்கார் பாரதிய ஜனதாவிலிருந்து நீக்கப்பட்டார். இதைத் தொ‌டர்ந்து உன்னாவ் பாலியல் வழக்கு விசாரணை, கடந்த ஆகஸ்ட் ஐந்தாம் தேதி முதல் நாள்தோறும் நடைபெற்று வந்தது.

சிறுமியை வன்கொடுமை செய்த விவகாரத்தில், கடந்த 16 ஆம் தேதி குல்தீப் செங்காரை, டெல்லி மாவட்ட நீதிமன்றம் குற்றவாளியாக அறிவி‌த்தது. இந்நிலையில், குல்தீப் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும், அவர் தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவருக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 10 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

https://www.A1TamilNews.com