கணவருக்குக் கொரோனா கஷாயம்.. 100 சவரன் நகைகளை சுருட்டிய மனைவி..!!

தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை பார்த்து வருபவர் வின்செண்ட். இவரது வீட்டில், கணவன் மனைவி உறங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில், 100 சவரன் நகைகளும், ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு, 100 சவரன் நகைகளை வங்கியில் வைக்காமல் வீட்டில் வைத்திருந்தது ஏன்? என சந்தேகம் எழுந்தது. கொள்ளை நடந்ததாக கூறப்பட்ட தினத்தன்று சுற்றிலும் இருந்த சிசிடிவி கேமிராக்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், வின்செண்ட் மனைவியின்
 

தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை பார்த்து வருபவர் வின்செண்ட். இவரது வீட்டில், கணவன் மனைவி உறங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில், 100 சவரன் நகைகளும், ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இந்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு, 100 சவரன் நகைகளை வங்கியில் வைக்காமல் வீட்டில் வைத்திருந்தது ஏன்? என சந்தேகம் எழுந்தது.

கொள்ளை நடந்ததாக கூறப்பட்ட தினத்தன்று சுற்றிலும் இருந்த சிசிடிவி கேமிராக்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், வின்செண்ட் மனைவியின் மேல் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதனையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், வின்சென்ட் மனைவியே நகைகளைப் பதுக்கி வைத்து விட்டு, திருடு போனதாக நாடகமாடியது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் வின்சென்ட் மனைவி ஜான்சி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததில், தன்னுடைய கணவர் வின்சென்ட் மிகவும் சிக்கனமானவர் என்றும், வரும் பணத்தை சிக்கனமாக சேமித்து நகைகளாக வாங்கிக் குவித்ததாகவும், ஏலச்சீட்டு நடத்திய வகையில் தனக்கு ரூ.10 லட்சம் வரைக்கும் கடன் இருந்ததாகவும், இந்த ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தி கணவரிடம் தொலைபேசியில் குரலை மாற்றி, வங்கியில் பாதுகாப்பில்லை.. நகைகளை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

வின்செண்ட்டும் மனைவியின் குரலை கண்டுபிடிக்காமல், வங்கியில் இருந்து அழைப்பு வந்ததாகவே கருதி, லாக்கரில் இருந்து நகைகளை எடுத்து வந்து வீட்டில் வைத்துள்ளார். பீரோவில் இருந்த 100 சவரன் நகைகளைத் திருடி விற்று, கடனை அடைச்சுடலாம்னு என்று முடிவெடுத்து சொந்த வீட்டிலேயே திருடியுள்ளார் இவரது மனைவி.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்புவதற்காக கபசுர கஷாயம் குடிக்க வேண்டும் என்று, தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்து விட்டு, கணவர் தூங்கியதும், இடுப்பிலிருந்து சாவிக்கொத்தை எடுத்து 100 சவரன் நகையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே புதைத்துள்ளார்.

தற்போது ஜான்ஸி கைது செய்யப்பட்டுள்ளார். சொந்த வீட்டிலேயே கணவருக்கு தூக்க மாத்திரைக் கொடுத்து மனைவியே திருடிய சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பீதியில் ஊரடங்கில் மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையிலும் இப்படி ஒரு நகைத் திருட்டு நாடகத்தை நடத்திய சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A1TamilNews.com