ஜவுளிக் கடைக்கு சீல்! ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றம்!!

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதை மீறி திறந்த ஜவுளிக்கடைக்கு அதிகாரிகள் போலீசார் துணையுடன் சீல் வைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூரில் ஒரு ஜவுளிக்கடையை திறந்துள்ளனர் அதன் உரிமையாளர்கள். இந்த விவரம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிய வந்துள்ளது. தனி தாசில்தார் வாசுதேவன் தலைமையில் அதிகாரிகளும் போலீசாரும் விரைந்து சென்றுள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்பட்டிருந்த ஜவுளிக்கடைக்கு சீல் வைத்து பூட்டியுள்ளனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜவுளிக்கடை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இடம்பெறாது.
 

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதை மீறி திறந்த ஜவுளிக்கடைக்கு அதிகாரிகள் போலீசார் துணையுடன் சீல் வைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூரில் ஒரு ஜவுளிக்கடையை திறந்துள்ளனர் அதன் உரிமையாளர்கள். இந்த விவரம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிய வந்துள்ளது. தனி தாசில்தார் வாசுதேவன் தலைமையில் அதிகாரிகளும் போலீசாரும் விரைந்து சென்றுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்பட்டிருந்த ஜவுளிக்கடைக்கு சீல் வைத்து பூட்டியுள்ளனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜவுளிக்கடை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இடம்பெறாது. பால், மளிகை, காய்கறி மற்றும் மருந்துக் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com