‘என்ன ஒரு ‘அயோக்கியா’தனம்…!’ – பார்த்திபன் பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை: விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன் நடிப்பில், வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகி, நேற்று முன்தினம் வெளியாகவிருந்த படம் அயோக்யா. ஆனால் நிதிப் பிரச்சினை காரணமாக ஒரு நாள் கழித்து நேற்று வெளியானது. இந்தப் படம் தெலுங்கில் வெளியான டெம்பர் (2015) படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டது. இந்தப் படத்தை நேற்று பார்த்தவர்கள், இது உள்ளே வெளியே படத்தின் தழுவல்தான் என்று கூறியிருந்தனர். உள்ளே வெளியே படம் 1993-ல் வெளியானது. பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்திருந்தார்.
 

 

சென்னை: விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன் நடிப்பில், வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகி, நேற்று முன்தினம் வெளியாகவிருந்த படம் அயோக்யா. ஆனால் நிதிப் பிரச்சினை காரணமாக ஒரு நாள் கழித்து நேற்று வெளியானது.

இந்தப் படம் தெலுங்கில் வெளியான டெம்பர் (2015) படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டது. இந்தப் படத்தை நேற்று பார்த்தவர்கள், இது உள்ளே வெளியே படத்தின் தழுவல்தான் என்று கூறியிருந்தனர்.

உள்ளே வெளியே படம் 1993-ல் வெளியானது. பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்திருந்தார். கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது.

உள்ளே வெளியே படத்தைத்தான் தெலுங்கில் காப்பியடித்து டெம்பர் என்று எடுத்து 2015-ல் வெளியிட்டு வெற்றிப் படமாக்கினர். அந்தத் தெலுங்குப் படத்தின் ரைட்ஸைத்தான் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கி தமிழில் அயோக்யாவாக எடுத்துள்ளனர். இதில் சுவாரஸ்யமான விஷயம், அயோக்யா படத்தில் பிரதான வில்லனாக நடித்திருப்பவர் ரா பார்த்திபன்தான்….

இது தன்னுடைய சொந்தப் படத்தின் காப்பிதான் என்பது தெரியாமலேயே அந்தப் படத்தில் நடித்திருக்கிறார் பார்த்திபன்.

இதுகுறித்து பார்த்திபன் ட்விட்டரில் இப்படிப் பதிவிட்டிருக்கிறார்:

‘அயோக்கியா’த்த்தனம்!
94-ல் வெளியான என் ginal ginal original ‘உள்ளே வெளியே’படத்தை In&out லவுட்டி Temper’ (Rights பெறாமல்) தெலுங்கில் Hit ஆக்கி தமிழிலும் தற்போது! அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு’அ-தனம்’? குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி? வழக்கு செய்யாமல்,பெருமையுடன் பதிவிடுகிறேன்!”

– வணக்கம் இந்தியா