ரஜினி பட இசையமைப்பாளர் அறிவிப்பு #தலைவர்168

தர்பார் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கான இசையமைப்பாளராக டி.இமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. தலைவர்168 என்று அழைக்கப்படும் இந்தப்படத்தில் டி.இமான் இசையமைக்கிறார். இமான் முதன் முதலாக ரஜினி படத்திற்கு இசையமைக்கிறார். இயக்குனர் சிவாவின் விருப்பத்திற்கேற்ப இந்த தேர்வு நடந்துள்ளதாகத் தெரிகிறது. இமான் இசையமைப்பாளர் என்று தகவல் வெளியானதும் இ = இளையராஜா, மான் = ரகுமான் என இருவரும் கலந்தவர் இமான் என்று
 

ர்பார் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கான இசையமைப்பாளராக டி.இமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

தலைவர்168 என்று அழைக்கப்படும் இந்தப்படத்தில் டி.இமான் இசையமைக்கிறார். இமான் முதன் முதலாக ரஜினி படத்திற்கு இசையமைக்கிறார். இயக்குனர் சிவாவின் விருப்பத்திற்கேற்ப இந்த தேர்வு நடந்துள்ளதாகத் தெரிகிறது.

இமான் இசையமைப்பாளர் என்று தகவல் வெளியானதும் இ = இளையராஜா, மான் = ரகுமான் என இருவரும் கலந்தவர் இமான் என்று ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பேட்ட, தர்பார் படங்களில் அனிருத் இசையமைத்து இருந்தார். தற்போது இமான் மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

https://www.A1TamilNews.com