அதிர்ச்சி!தமிழ் கதாநாயகிக்கு கொரோனா தொற்று!

அம்பாசமுத்திரம் அம்பானி, அரசாங்கம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நவ்னீத் கௌர். இவர் தமிழைத் தவிர தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். திரைத்துறையில் மட்டுமின்றி மகாராஷ்டிரா மக்களவைத் தேர்தலிலும் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார். தேர்தலில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த இருமுறை எம்.பியாக இருந்த ஆனந்த் ராவ் அட்சுலை 36,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகையும் எம்.பி.யுமான நவ்னீத் கெளர் மற்றும் அவருடைய கணவர்
 

ம்பாசமுத்திரம் அம்பானி, அரசாங்கம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நவ்னீத் கௌர். இவர் தமிழைத் தவிர தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

திரைத்துறையில் மட்டுமின்றி மகாராஷ்டிரா மக்களவைத் தேர்தலிலும் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார். தேர்தலில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த இருமுறை எம்.பியாக இருந்த ஆனந்த் ராவ் அட்சுலை 36,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகையும் எம்.பி.யுமான நவ்னீத் கெளர் மற்றும் அவருடைய கணவர் ரவி ராணா இருவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக நவ்னீத் தமது ட்விட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அவருடைய குடும்பத்தில் அனைவரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை மேற்கொள்ளும் படியும் தமது வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

A1TamilNews.com