கமல் – ரஜினி வேடங்களில் சூர்யா- தனுஷ்… ஸ்ரீப்ரியாவின் கனவு?

ரஜினியும் கமலும் இணைந்து நடித்துக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் வெளிவந்த அவள் அப்படித்தான் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. பெண்கள் உரிமைகளைப் பற்றி 1978ல் வெளிவந்த இந்தப் படத்தில் நாயகியாக ஸ்ரீப்ரியா நடித்து இருந்தார். கமல் ஹாசனும் ரஜினிகாந்தும் இரட்டை நாயகர்களாக நடித்து இருந்தார்கள். மூவரும் மாறுபட்ட கோணத்தில் நடித்து இருந்தார்கள். திரைப்படக் கல்லூரியில் பயின்ற மாணவர் இயக்கிய முதல் படம் என்ற புகழ் பெற்றார், படத்தின் இயக்குனர் ருத்ரய்யா. 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்ததாக
 

ஜினியும் கமலும் இணைந்து நடித்துக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் வெளிவந்த அவள் அப்படித்தான் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. பெண்கள் உரிமைகளைப் பற்றி 1978ல் வெளிவந்த இந்தப் படத்தில் நாயகியாக ஸ்ரீப்ரியா நடித்து இருந்தார். கமல் ஹாசனும் ரஜினிகாந்தும் இரட்டை நாயகர்களாக நடித்து இருந்தார்கள்.

மூவரும் மாறுபட்ட கோணத்தில் நடித்து இருந்தார்கள். திரைப்படக் கல்லூரியில் பயின்ற மாணவர் இயக்கிய முதல் படம் என்ற புகழ் பெற்றார், படத்தின் இயக்குனர் ருத்ரய்யா. 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்ததாக கூறப்பட்டது. படத்தின் வித்தியாசமான ஒளிப்பதிவுக்காகவும், காமிரா கோணங்களுக்காகவும் பாராட்டு பெற்றது.

அப்போது நாயகியாக நடித்த ஸ்ரீப்ரியா அவள் அப்படித்தான் படத்தை ரீ மேக் செய்ய விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது,

“அவள் அப்படித்தான்’ படத்தின் ரீமேக் உரிமையை எனக்குத் தர்றீங்களா’ன்னு இயக்குநர் ருத்ரய்யாகிட்ட கேட்டேன். `ரஜினி, கமல் ரோல்ல யார் நடிப்பாங்க’ன்னு கேட்டவர், உரிமையைத் தர மறுத்துட்டார். ஆனா, அவர் மறைவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு அனுமதி கொடுத்தார். அப்போ `த்ரிஷ்யம்’ (தெலுங்கு) படத்தை இயக்கிட்டிருந்ததால, அந்த வாய்ப்பை பயன்படுத்திக்க முடியலை. கமல் சார் ரோல்ல சூர்யாவையும், ரஜினி சார் ரோல்ல தனுஷையும், நான் நடிச்ச ரோல்ல நயன்தாரா அல்லது த்ரிஷாவையும் நடிக்கவைக்க இப்போதும் எனக்குள் யோசனை இருக்கு,” என்று கூறியுள்ளார்.

படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு சாந்தி முகூர்த்தம் என்ற படத்தின் மூலம் 1984ம் ஆண்டு இயக்குனராக அவதாரம் எடுத்தார் ஸ்ரீப்ரியா.  தமிழ்  தெலுங்கு கன்னடம் உட்பட ஆறு படங்களை இயக்கியுள்ளார். த்ரிஷ்யம் மலையாளப் படத்தை வெங்கடேஷ், மீனா, நதியா  நடிப்பில்  தெலுங்கில் இயக்கியவரும் ஸ்ரீப்ரியா தான்!

சூர்யாவும் தனுஷும் இணைந்து இதுவரை நடித்ததில்லை. ஸ்ரீப்ரியாவின் ஆசை நிறைவேறுமா? மீண்டும் அவள் அப்படித்தான் படம் உருவாகுமா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

https://www.A1TamilNews.com