ஏர்போர்ட்டில் பாதுகாப்பு இல்லையா? – சௌந்தர்யா ரஜினிகாந்த் கேள்வி!

லண்டன்: விமான நிலையங்களில் பாதுகாப்பு இல்லையா என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் கணவரின் பாஸ்போர்ட் மற்றும் விலைமதிப்பு மிக்க பொருட்கள் திருடு போன சம்பவத்திற்குப் பிறகு இவ்வாறு கேட்டுள்ளார். லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் எமிரேட்ஸ் விமானத்தின் பயணிகள் காத்திருக்கும் லவுஞ்சில், காருக்காக காத்திருந்த போது சௌந்தர்யா, விமானத்தின் உள்ளே எடுத்து வந்திருந்த சிறிய லக்கேஜ் பெட்டியை யாரோ திருடி விட்டார்கள். அதில் விசாகனின் பாஸ்போர்ட் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள்
 

லண்டன்: விமான நிலையங்களில் பாதுகாப்பு இல்லையா என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் கணவரின் பாஸ்போர்ட் மற்றும் விலைமதிப்பு மிக்க பொருட்கள் திருடு போன சம்பவத்திற்குப் பிறகு இவ்வாறு கேட்டுள்ளார்.

லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் எமிரேட்ஸ் விமானத்தின் பயணிகள் காத்திருக்கும் லவுஞ்சில், காருக்காக காத்திருந்த போது சௌந்தர்யா, விமானத்தின் உள்ளே எடுத்து வந்திருந்த  சிறிய லக்கேஜ் பெட்டியை  யாரோ திருடி விட்டார்கள். அதில் விசாகனின் பாஸ்போர்ட் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் களவு போய் விட்டது.

உடனடியாக விமான நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இமெயில் மூலம் பதில் வரும் என்று கூறியுள்ளார்கள். அடுத்த நாள் இமெயிலில், விமான நிலையத்தில் சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் காத்திருந்த  பகுதியில், செக்யூரிட்டி கேமிரா வேலை செய்யவில்லை. அதனால் திருடியவர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை, ஸாரி என்று பதில் அனுப்பியுள்ளனர்.

இதைப்பற்றி ட்விட்டரில் எழுதியுள்ள சௌந்தர்யா, “பன்னாட்டு பயணிகளுக்கே விமான நிலையத்தில் பாதுகாப்பு இல்லையா? விமான நிலையத்தில் பாதுகாப்புக்கு என்ன உறுதி செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய அமைப்பும், விமான நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டும்,” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

லண்டன் ஹீத்ரு விமான நிலையம் உலகின் முக்கியமான பன்னாட்டு விமானநிலையமாகும். துபாய் விமான நிலையத்திற்கு அடுத்த உலகின் இரண்டாவது பிஸியான பன்னாட்டு விமான நிலையத்தில் தான், அதுவும் விமான நிறுவன லவுஞ்சில், பயணிகள் பெட்டி திருடு போயுள்ளது. 

விசாகனுக்கு, இந்திய தூதரகம் மூலம் பாஸ்போர்ட்டின் நகல் பெறப்பட்டு பயணத்தை தொடர்ந்துள்ளார்கள். 

–