தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் – கமல் ஹாசன்… அன்றும் இன்றும்!

ரஜினிகாந்த் நடிக்க வந்த போது கமல் ஹாசன் பெரிய நடிகர். கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருந்தார். அவருடைய படத்தில் ஒரு சிறு வேடத்தில் தானே ரஜினிகாந்த் அறிமுகமானர். கமல்ஹாசனுடன் பல படங்களில் நடித்த பிறகு தனிக் கதாநாயகனாக உருவெடுத்தார் ரஜினிகாந்த். இருவரும் சம நிலையில் வந்தனர். ஒரு கட்டத்தில் கமலை முந்தினார் ரஜினி. அதற்குப் பின்னால் இருவருக்கும் உண்டான இடைவெளி மிகப் பெரியதாக ஆனது. சினிமாவில் இன்று ரஜினிகாந்துக்கு அடுத்த இடம் என்ற நிலையைக்
 

 

ஜினிகாந்த் நடிக்க வந்த போது கமல் ஹாசன் பெரிய நடிகர். கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருந்தார். அவருடைய படத்தில் ஒரு சிறு வேடத்தில் தானே ரஜினிகாந்த் அறிமுகமானர். கமல்ஹாசனுடன் பல படங்களில் நடித்த பிறகு தனிக் கதாநாயகனாக உருவெடுத்தார் ரஜினிகாந்த்.

இருவரும் சம நிலையில் வந்தனர். ஒரு கட்டத்தில் கமலை முந்தினார் ரஜினி. அதற்குப் பின்னால் இருவருக்கும் உண்டான இடைவெளி மிகப் பெரியதாக ஆனது. சினிமாவில் இன்று ரஜினிகாந்துக்கு அடுத்த இடம் என்ற நிலையைக் கூட கமல் ஹாசன் இழந்துவிட்டார். இரண்டாம் நிலையில் இருப்பவர்கள் விஜய்யும், அஜித்தும். ரஜினிக்கு அடுத்த நிலையில் ‘ஒப்பனிங்’ இந்த இருவருக்கு மட்டுமே உள்ளது.

இன்று ரஜினிகாந்த் எந்த இடத்தில் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். மக்கள், ரஜினிகாந்த் என்னும் ஒரே ஒரு மனிதனை பார்ப்பதற்காகவே தியேட்டர்களை மொய்க்கிறார்கள். தோல்விப் படம் என்று சொல்லப்படும் ரஜினிகாந்த் பட வசூல் மற்ற நடிகர்களின் வெற்றிப்படங்களின் வசூலை விட அதிகம். தோல்வி என்று சொல்லப்பட்ட ‘லிங்கா’ உலக அளவில் தமிழ் பட வசூல் வரிசையில் டாப் 10ல் இருக்கிறது. காலா போன்ற ஒரு பிரச்சார ரீதியான படத்தில் நடித்து அதை 200 கோடி வசூல செய்யவைக்க ரஜினிகாந்தைத் தவிர யாராலும் முடியாது. கடந்த 40 வருடங்களாக அசைக்கவே முடியாத உச்சத்தில் இருக்கிறார்.

கமல் ஹாசன் படங்களுக்கு ஓப்பனிங் என்ற ஒன்றே இப்போது இல்லை. அதற்கு விஸ்வரூபம் – 2 படமே சமீபத்திய சாட்சி. முதல் நாள் ரிசல்ட் கேட்டுவிட்டு, படம் நன்றாக இருக்கிறது என்றால் அடுத்த 2 நாள் கூட்டம் வரும், முதல் வாரம் முழுக்க ‘படம் நன்றாக இருக்கிறது’ என்று பார்த்த அனைவரும் சொல்லும் பட்சத்தில் மட்டுமே கமல் ஹாசன் படம் வெற்றி பெரும். அதுவும் ரஜினிகாந்த் பட சாதனைகளை நெருங்கவே முடியாது. காரணம் கமல்ஹாசனை ஒரு திறமையான நடிகராக மட்டுமே மக்கள் பார்க்கின்றனர்.

ரஜினிகாந்த் நடிக்க வந்த போது எம்ஜிஆர் தான் உச்ச நடிகர். 1978ல் எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்திய போது வெளியான படம்தான் பைரவி. ரஜினியை சூப்பர்ஸ்டார் என்று விளம்பரப்படுத்திய படம். அதே 1978ல் அவரை உச்ச நடிகராக நிரூபித்த படம் ப்ரியா. அதிலிருந்து இன்று ரஜினிகாந்த் ஒரு Phenomenonஆக உருவாகிவிட்டார். அதாவது தன் துறையில் 40 வருடங்களாகியும் தானே ராஜாவாக இருக்கிறார். இது முழுக்க முழுக்க ரஜினியின் பிம்பத்திற்கு உண்டான வெற்றி. மக்களுக்கு பிடித்தமானதையே அவர் செய்கிறார்.

இன்று ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்குத்தான் இளைய தலைமுறை நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள். அவருடைய படப் பெயர்கள்தான் அதிக அளவில் மீண்டும் மீண்டும் புதியபடங்களுக்கு வைக்கப் படுகின்றன. இப்போது வட இந்திய ஊடகங்கள் கூட இந்தியாவின் ‘Demi God’ ஆக ரஜினியைத்தான் சொல்கின்றன.

ஆனால் ரஜினியை மக்கள் வெறும் நடிகராக மட்டுமே பார்ப்பதில்லை. ரஜினியின் இன்றைய உச்சக்கட்ட புகழுக்கு காரணம் அவர் நடிகர் என்பதால் மட்டும் அல்ல. அவர் ஒரு நல்ல மனிதர் என்கிற எண்ணம் மிகப் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது.

சினிமாத் துறையில் கமல் ஹாசனைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அவர்கள் குறிப்பிடுவது, கமல் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்பதுதான். ஆனால் ரஜினியை குறிப்பிடும்போது எல்லோருமே சொல்லி வைத்தது போல் ரஜினி ஒரு சிறந்த மனிதன், அவரை போல ஒரு Humble, down to earth personஐ பார்க்கவே முடியாது. புகழின் உச்சியில் இருந்தாலும் அதை அவர் தன் தலையில் ஏற்றிக்கொள்ளவே இல்லை. மனிதர்களை மதிக்கத் தெரிந்தவர். மிக எளிமையான மனிதர் என்பதுதான்.

ஆக கமல் ஒரு சிறந்த நடிகர், ரஜினி ஒரு சிறந்த மனிதர். இதுதான் இன்று சினிமாக்காரர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் மத்தியில் இருக்கும் பிம்பம். கமலின் பிம்பம் முழுவதும் சினிமாவினால் ஆனது, ஆனால் ரஜினியின் பிம்பம் சினிமாவுக்கு வெளியே அவர் நடந்து கொள்ளும் விதத்தையும், அவர் தனிப்பட்ட வாழ்க்கை முறையையும் வைத்து வந்தது. ரஜினியின் படங்கள் ஒரு திருவிழா போலவும், கமலின் படங்கள் இன்னொரு படம் என்கிற அளவில் மட்டுமே ரிலீஸ் ஆகின்றன.

ரஜினி தன்னை நம்பிய எந்த தயாரிப்பாளரையும் நஷ்டத்தில் விட்டதில்லை, நஷ்டம் என்று சொன்னவர்களுக்கு பணத்தைத் திருப்பி கொடுக்கும் ஒரே மனிதன் ரஜினிகாந்த் மட்டுமே. தன்னை ஆரம்பத்தில் வளர்த்துவிட்ட தயாரிப்பாளர்களை அவர்கள் நஷ்டப்பட்டு நின்ற போது வலிய போய் உதவி இருக்கிறார். சினிமாவில் வாழ்ந்து கெட்ட சிலரை தன் படத்தில் பங்குதாரர்களாக்கி அவர்கள் வாழ்க்கையை செழுமைப் படுத்தியிருக்கிறார்.

ஆனால் கமல்ஹாசனால் பொருளாதார ரீதியில் நஷ்டப்பட்ட தயாரிப்பாளர்கள் ஏராளம். ஏவிஎம், சத்யா மூவிஸ், நாகி ரெட்டி, கவிதாலயா, சிவாஜி பிலிம்ஸ், கலைப்புலி தாணு உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் ரஜினியின் கால்ஷீட் கிடைப்பதை ஒரு வரமாக பார்த்தார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் கமலை வைத்து படம் எடுத்து நஷ்டப்பட்டு பின் கமலை வைத்து படம் எடுப்பதை அறவே நிறுத்தியவர்கள் என்பதுதான் திரையுலக பேச்சாக உள்ளது. குறிப்பாக கலைப்புலி தாணு.

இன்றைய தலைமுறை நடிகர்களான அஜித், விஜய் கூட தங்களை வளர்த்த தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுத்து வெற்றி பெற வைக்கிறார்கள். ஆனால் கமல்ஹாசன் ‘கல்யாணராமன்’ பட இயக்குனர் ஜி.என்.ரங்கராஜனுக்காக ’மகராசன்’ என்று ஒரு படத்தில் நடித்தார். அதன் பிறகு அப்படிச் செய்ததாக எந்த தகவலும் இல்லை. 67 வயது ரஜினிகாந்தை நம்பி தற்போது 700 கோடி ரூபாய் 2.0 படத் தயாரிப்பில் போடப்பட்டிருக்கிறது. ஆனால் கமல்ஹாசனின் விஸ்வரூபம் விற்பனை, வசூல் என்ன, சபாஷ் நாயுடுவின் கதி என்ன? என்பது மர்மமாகவே இருக்கிறது.

ரஜினி ஒரு போதும் விளம்பரங்களில் நடித்ததில்லை. அவர் படத்தில் உபயோகப்படுத்தும் பொருட்களே பிரபலம் ஆகும்போது அவர் விளம்பரம் செய்ய ஒப்புக் கொண்டால் குறைந்தபட்சம் வருடத்துக்கு 100 கோடிக்கு மேல் எளிதாக சம்பாதிக்க முடியும். ஆனால் ரஜினி ஒருபோதும் பணத்துக்காக அதைச் செய்வதில்லை. தன் புகழை வைத்து, எதையும் மக்கள் மீது திணிப்பதில்லை. கமல் ஹாசன் விளம்பரங்களில் நடிக்கிறார், பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சியை நடத்துகிறார்.

சினிமா, அரசியல், பொது நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் Protocol முறைப்படி ரஜினிக்குத்தான் முதல் மரியாதை. கமல் இருக்கும் இடங்களில் ரஜினி வந்தால் மொத்த கவனமும் ரஜினிமீதுதான். ரஜினி இல்லாதவரை கமல் கவனிக்கப்படுவார், ரஜினி வந்தால் ரஜினி மட்டுமே கவனிக்கப்படுவார். இவையெல்லாம் நிஜம். கமலை குறைத்து மதிப்பிட்டு எழுதவில்லை.

ஒரு முறை நடிகர் சிவகுமார் சொன்னார், “ஒரு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். எம்ஜிஆர் உள்ளே நுழைந்தபோது பெரும் கரவொலி எழுந்தது, சிறிது நேரம் கழித்து ரஜினி வந்தார், அப்போது ஆரம்பித்த கரவொலி அவர் அமரும்வரை அரங்கமே அதிர்ந்தது,” என்றார். அதுதான் ரஜினிகாந்த். அவர் கலந்துகொண்ட விழாக்களில் எந்த காணொலியை வேண்டுமானாலும் பாருங்கள், இது உண்மையா இல்லையா என்று தெரியும்.

– மனோகரன்

A1TamilNews.com