நீங்கள் இல்லாமல் நான் இல்லை! ரஜினிகாந்த் உருக்கம்!!
ரசிகர்களின் அன்பை நெகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
”என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி,” என்று குறிப்பிட்டுள்ள ரஜினிகாந்த் நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்ற ஹேஷ்டேக்-ஐயும் சேர்த்துள்ளார்.
சமீபகாலமாக ட்விட்டரில் பதிவிடும் ரஜினிகாந்த் பஞ்ச் டயலாக் போல் ஒரு சில வார்த்தைகள் கொண்ட வாக்கியத்தை ஹேஷ்டேக் ஆக குறிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ரசிகர்களும் அந்த ஹேஷ்டேக்கை பிரபலமாக்கி, ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடிக்க வைத்து விடுகிறார்கள்.