புது வீட்டில் கலைஞானம்… விளக்கேற்றி வைத்த ரஜினிகாந்த்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த வாக்கை நிறைவேற்றி, வாங்கிக் கொடுத்த புதுவீட்டில் கலைஞானம் குடும்பத்தினருடன் விளக்கேற்றி வைத்தார். ஆகஸ்ட் 14ம் தேதி தயாரிப்பாளர், கதாசிரியர் கலைஞானத்தின் 90வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. அப்போது கலைஞானம் இன்னும் வாடகை வீட்டில் குடியிருப்பதாக நடிகர் சிவகுமார் தெரிவித்தார். அரசு சார்பில் வீடு வழங்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம் கூறியபோதிலும், தன்னுடைய செலவிலேயே கலைஞானத்திற்கு வீடு வாங்கித் தருவேன் என்று ரஜினிகாந்த் அறிவித்தார். சொன்னதைப் போல் செப்டம்பர் 4ம்
 

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த வாக்கை நிறைவேற்றி, வாங்கிக் கொடுத்த புதுவீட்டில் கலைஞானம் குடும்பத்தினருடன் விளக்கேற்றி வைத்தார்.

ஆகஸ்ட் 14ம் தேதி தயாரிப்பாளர், கதாசிரியர் கலைஞானத்தின் 90வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. அப்போது கலைஞானம் இன்னும் வாடகை வீட்டில் குடியிருப்பதாக நடிகர் சிவகுமார் தெரிவித்தார். அரசு சார்பில் வீடு வழங்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம் கூறியபோதிலும், தன்னுடைய செலவிலேயே கலைஞானத்திற்கு வீடு வாங்கித் தருவேன் என்று ரஜினிகாந்த் அறிவித்தார்.

சொன்னதைப் போல் செப்டம்பர் 4ம் தேதி வீட்டை வாங்கிக் கொடுத்து விட்டார். தர்பார் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டதால், அவர் வராமல் குடிபுக மாட்டோம் என்று கலைஞானமும் அவருடைய மனைவியும் பிடிவாதமாக இருந்துள்ளனர்.

தர்பார் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியதும், கலைஞானத்தின் புதிய வீட்டில் இன்று  விளக்கேற்றி வைத்தார் ரஜினிகாந்த். இந்த நிகழ்வு குறித்து தயாரிப்பாளர் கலைஞானம் கூறியுள்ளதாவது,

“போன 4ம் தேதி கிட்டத்தட்ட 50 ரூபாய்(லட்சம்) பெருமான வீட்டை ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணி என் கையில் கொடுத்துட்டாரு. இன்று, அவர் சொன்ன வாக்குப்படி வந்து விளக்கேற்றி வைத்து விட்டுப் போனார். காலையில் பத்தேகாலுக்கு விளக்கு ஏற்றி குடிபுகுந்தாகி விட்டது” என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறியுள்ளார் கலைஞானம்.

வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினியை பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் கலைஞானம். அதே படத்திற்காக வினியோகஸ்தராக இருந்த கலைப்புலி தாணு “சூப்பர் ஸ்டார்” பட்டத்தை வழங்கியதோடு, சென்னையில் உயரமான கட் அவுட்டும் வைத்து பெருமை படுத்தினார்.

கலைஞானம் சொந்த வீடில்லாமல் இருக்கிறார் என்ற தகவல் தெரிந்ததும் ஒரு நொடி கூட தாமதிக்காமல் வீடு வாங்கித் தருவேன் என்றவர் அதை பதினைந்து நாட்களிலேயே செய்து முடித்தும் உள்ளார். 

– வணக்கம் இந்தியா