இந்தப் படத்துல குடிக்கிற மாதிரி சீனே கிடையாது! – சிவகார்த்திகேயன் படத்துக்கு கியாரண்டி தரும் இயக்குநர்

சிவா மனசுல சக்தி தொடங்கி, கடவுள் இருக்கான் குமாரு வரை, ராஜேஷ் இயக்கிய எல்லா படங்களிலும் டாஸ்மாக், குடிக்கும் ஹீரோ, குடித்துவிட்டுப் பாட்டுப் பாடுவது, கலாட்ட செய்வது போன்ற காட்சிகள் நீக்கமற நிறைந்திருக்கும். ஒருகட்டத்தில் அது திகட்டும் அளவுக்கு வந்துவிட்ட நிலையில்தான், சிவகார்த்திகேயனை வைத்து Mr லோக்கல் படத்தை எடுத்துள்ளார். இந்தப் படத்தில் குடிக்கும் காட்சிகளே இல்லை என்று கூறியுள்ளார் இயக்குநர் ராஜேஷ். படத்தின் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், “சிவகார்த்திகேயன், ஞானவேல்ராஜா சாருடன் இந்த படத்தை
 

சிவா மனசுல சக்தி தொடங்கி, கடவுள் இருக்கான் குமாரு வரை, ராஜேஷ் இயக்கிய எல்லா படங்களிலும் டாஸ்மாக், குடிக்கும் ஹீரோ, குடித்துவிட்டுப் பாட்டுப் பாடுவது, கலாட்ட செய்வது போன்ற காட்சிகள் நீக்கமற நிறைந்திருக்கும். ஒருகட்டத்தில் அது திகட்டும் அளவுக்கு வந்துவிட்ட நிலையில்தான், சிவகார்த்திகேயனை வைத்து Mr லோக்கல் படத்தை எடுத்துள்ளார்.

இந்தப் படத்தில் குடிக்கும் காட்சிகளே இல்லை என்று கூறியுள்ளார் இயக்குநர் ராஜேஷ். படத்தின் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், “சிவகார்த்திகேயன், ஞானவேல்ராஜா சாருடன் இந்த படத்தை நான் செய்கிறேன் என்ற பேச்சுவார்த்தை வந்த உடனேயே எனக்கு பெரிய ஹிட் படமா கொடுத்துருங்க என்றார் ஞானவேல்ராஜா சார். குடிக்கிற காட்சிகள், குடித்து விட்டு பாடுற பாடல், பெண்களை திட்டி பாடுற பாடல் என எதுவும் வேண்டாம் சார் என்றார் சிவகார்த்திகேயன். அப்படி எதுவும் இந்த படத்தில் இருக்காது, கிளீன் படமாக இருக்கும்,” என்றார்.

Mr லோக்கல் செய்தியாளர் சந்திப்பு படங்கள்:.

[ See image gallery at a1tamilnews.com]

– வணக்கம் இந்தியா