கமல் ஹாசனுக்கு அமெரிக்காவிலிருந்து “ரசிக நண்பன்” வாழ்த்து! #HBDKamalHaasan

மகனுடைய நலன் கருதி அமெரிக்காவில் வசித்து வரும் முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் “சகலகலாவல்வனுக்கு சாமான்யனின் வாழ்த்து” என்ற தலைப்பிட்டு உருக்கமான வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!! தமிழ்ச் சினிமாவை உலக சினிமா தரத்திற்கு உயர்த்திய உலகநாயகனுக்கு உங்கள் உண்மையான ரசிகநண்பனின் வாழ்த்து..! 5 வயதில் தொடங்கி 65ஐ வாழ்வில் கடந்தாலும், 60 ஆண்டுகளாக இந்தியத் திரையுலகில் யாரும் செய்யமுடியாத பல சாதனைகளைச் செய்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து, நடிகர்திலகம் சிவாஜியின்
 

கனுடைய நலன் கருதி அமெரிக்காவில் வசித்து வரும் முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் “சகலகலாவல்வனுக்கு சாமான்யனின் வாழ்த்து” என்ற தலைப்பிட்டு உருக்கமான வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!

தமிழ்ச் சினிமாவை உலக சினிமா தரத்திற்கு உயர்த்திய உலகநாயகனுக்கு உங்கள் உண்மையான ரசிகநண்பனின் வாழ்த்து..!

5 வயதில் தொடங்கி 65ஐ வாழ்வில் கடந்தாலும், 60 ஆண்டுகளாக இந்தியத் திரையுலகில் யாரும் செய்யமுடியாத பல சாதனைகளைச் செய்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து, நடிகர்திலகம் சிவாஜியின் கால்தடம் பதித்து , எனது தலைவர் கலைஞரால் கலைஞானி என பட்டம் பெற்ற கலைச்செல்வம் நீங்கள். நீங்கள் நமது தமிழ் திரையுலகிற்கும், தமிழ் நாட்டிற்கும் கிடைத்த காலத்தால் அழியாத கலைப் பொக்கிஷம்.

உங்கள் கலைப்பயணத்தில் எனக்கு விருமாண்டியில் நல்லமநாயக்கராகவும், தசாவதாரத்தில் இரண்டாம் குழோத்துங்கச் சோழனாகவும், 2 படங்களில் நடிக்க வாய்ப்பு தந்து , 20 படங்களில் நடித்தது போன்ற அனுபவத்தையும் தந்த நல்ல மனிதருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

100 ஆண்டுகாலம் வாழ்க ..! நோய்நொடி இல்லாமல் வாழ்க…! என மனதார வாழ்த்துகிறேன்…!

நம் இருவருக்கும் இடையே உள்ள நட்பு மிக நெருக்கமானது..! நேரடியாக வந்து வாழ்த்த வேண்டும் என்று மனம் விரும்பினாலும், எனது குடும்ப சூழ்நிலை காரணமாக நான்
அமெரிக்காவில் வாழ்வதால் வர இயலவில்லை. அதனால் இந்த கடிதத்தையே நேரடியாக வந்து அருகில் இருந்து வாழ்த்தியதுபோல் எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்…!!

வாழ்க உங்களது புகழ்..!!
வளர்க உங்களது
கலைப் பயணம்..!!

என்றும் உங்கள்
ரசிகநண்பன்
நெப்போலியன்
Nashville
Tennessee
USA.

https://www.A1TamilNews.com