கமல் ஹாஸனின் கடைசி படம்… மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது!
இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பை ஷங்கர் நிறுத்தி விட்டதாக தகவல் வெளியானது. மீண்டும் அவரது தோற்றத்தை ஹாலிவுட் மேக்கப் கலைஞர்களை வைத்து மாற்றி அமைத்து வருவதாகவும் கூறப்பட்டது.
தற்போது அந்த பணிகள் முடிந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இப்போதைய ஷெட்யூலில் கமல் ஹாசனும், காஜல்அகர்வாலும் பங்கேற்று நடித்து வருகிறார்கள்.
தொடர்ந்து 3 மாதங்கள் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. மே மாதம் பொதுத் தேர்தல் என்பதால் அதற்கு முன்பாக கமலின் பகுதியை எடுத்து முடிக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.
கமல் ஹாஸனின் திரையுலக பயணத்தில் இந்தியன் 2 தான் கடைசி படம். இந்தப் படத்துப் பிறகு சினிமாவிலிருந்து விலகி விடுவேன் என்றும் கமல்ஹாசன் ஏற்கனவே கூறியுள்ளார்.
– வணக்கம் இந்தியா