இந்தியன்2 படப்பிடிப்புத் தளத்தில் விபத்து.. கமல் ஹாசன் அதிர்ச்சி..

ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன்2 படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் கமல் ஹாசன் வருத்தத்தை பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் கூறியுள்ளதாவது “எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம்
 

ங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன்2 படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் கமல் ஹாசன் வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அவர் கூறியுள்ளதாவது

“எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்.

என்று கமல் ஹாசன் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இந்த விபத்து கமல் ஹாசனை மிகவும் அதிர்ச்சியடைச் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

http://www.A1TamilNews.com