60 வயது மாநிறம்… கலைப்புலி தாணுவின் அடுத்த ரிலீஸ்!

முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாகவும், அனைத்து ஊடக நண்பர்களும் வரவேண்டும் என்றும் கலைப்புலி தாணுவி்டமிருந்து நேற்று திடீர் அழைப்பு வந்தது. கொட்டும் மழையிலும் திரண்டு வந்துவிட்டனர் செய்தியாளர்கள். மாலை 7 மணிக்கு இயக்குநர் ராதாமோகன், நடிகர் விக்ரம் பிரபுவுடன் வந்தார் தாணு. தனது அடுத்த புதிய படம் தயாராக உள்ளதாகவும், ஆகஸ்டில் ரிலீஸ் என்றும் அறிவித்துவிட்டு, படத்தின் தலைப்பை வெளியிட்டார். அது ‘60 வயது மாநிறம்’. விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ் நடித்துள்ளனர். மேலும் இந்துஜா,
 


முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாகவும், அனைத்து ஊடக நண்பர்களும் வரவேண்டும் என்றும் கலைப்புலி தாணுவி்டமிருந்து நேற்று திடீர் அழைப்பு வந்தது.

கொட்டும் மழையிலும் திரண்டு வந்துவிட்டனர் செய்தியாளர்கள். மாலை 7 மணிக்கு இயக்குநர் ராதாமோகன், நடிகர் விக்ரம் பிரபுவுடன் வந்தார் தாணு.

தனது அடுத்த புதிய படம் தயாராக உள்ளதாகவும், ஆகஸ்டில் ரிலீஸ் என்றும் அறிவித்துவிட்டு, படத்தின் தலைப்பை வெளியிட்டார். அது ‘60 வயது மாநிறம்’.

விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ் நடித்துள்ளனர்.

மேலும் இந்துஜா, குமரவேல், ஷரத், மதுமிதா, மோகன்ராம், அருள்ஜோதி, பரத் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, விஜி வசனம் எழுதியுள்ளார். பா.விஜய், பழநிபாரதி, விவேக் மூவரும் பாடல்கள் எழுதியுள்ளனர். ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, படம் ஆரம்பிப்பதில் தொடங்கி, வெளியீடு வரை படு பிரமாண்டமாக நடத்துவார் தாணு. ஆனால் முதல் முறையாக, ஒரு படத்தையே சத்தமில்லாமல் தயாரித்து முடித்துவிட்டு, ரிலீஸை அறிவித்துள்ளார்.

– வணக்கம் இந்தியா