கைவிடப்பட்டதா இந்தியன் 2?
22 ஆண்டுகள் கழித்து ‘இந்தியன் 2’ படத்துக்காக கமல் – ஷங்கர் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்தில் கமல் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
திரைக்கதை, வசனம் எழுதும் பணிகள் முடிவடைந்து, படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களையும் தேர்வு செய்துவிட்டனர். கடந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருமுறை தள்ளிப் போனது. இதனால் இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.
இப்போது இதனை மறுத்துள்ள படக்குழுவினர், இந்தியன்-2 படப்பிடிப்பு வருகிற 18-ந் தேதி தொடங்கும் என்றும் அறிவித்துள்ளனர்.
படப்பிடிப்புக்காக பொள்ளாச்சியில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் சில வாரங்கள் அங்கு முகாமிட்டு படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். உக்ரைனில் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்கள்.
இதில் சிம்பு கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த நெடுமுடி வேணு சி.பி.ஐ. அதிகாரியாக வருகிறார்.
– வணக்கம் இந்தியா