கங்கையில் விழுந்த ரஜினியின் ருத்ராட்சம் திரும்பக் கிடைத்தது எப்படி?

நான் ஒருமுறை இமயமலைக்கு சென்றிருந்தபோது கங்கை ஆற்றில் குளித்தேன். அப்போது கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்ச மாலை கழன்று விழுந்துவிட்டது. இதனால் கவலைப்பட்டேன். பின்னர் இமயமலையில் ஒரு ஒற்றையடிப் பாதையில் நடந்தபோது, எதிரில் ஒரு அகோரி வந்தார். நான் அவரை வணங்கினேன். அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கையில் என்னிடம் இருந்த பணத்தைக் கொடுத்தேன். அவர் என்னைப் பார்த்து உனக்குப் பணம் வேண்டுமா என்று கேட்டார். என்னிடம் கொஞ்சம் அதிகமாகவே பணம் இருக்கிறது என்று நான் சொன்னேன். பின்னர்
 

நான் ஒருமுறை இமயமலைக்கு சென்றிருந்தபோது கங்கை ஆற்றில் குளித்தேன். அப்போது கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்ச மாலை கழன்று விழுந்துவிட்டது. இதனால் கவலைப்பட்டேன். பின்னர் இமயமலையில் ஒரு ஒற்றையடிப் பாதையில் நடந்தபோது, எதிரில் ஒரு அகோரி வந்தார்.

நான் அவரை வணங்கினேன். அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கையில் என்னிடம் இருந்த பணத்தைக் கொடுத்தேன். அவர் என்னைப் பார்த்து உனக்குப் பணம் வேண்டுமா என்று கேட்டார். என்னிடம் கொஞ்சம் அதிகமாகவே பணம் இருக்கிறது என்று நான் சொன்னேன்.

பின்னர் காணாமல் போன ருத்ராட்ச மாலை உனக்கு வேண்டும் இல்லையா?… அது கிடைக்கும்’, என்று கூறிவிட்டுச் சென்றார். அதுபோல ஒரு ஆசிரமத்துக்கு சென்றபோது ஒரு பெண், ‘உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு எனக்கு அந்த ருத்ராட்ச மாலையை கொடுத்தார். இதுதான் அகோரிகளின் மகத்துவம். 

கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா – மோகன்லால் நடித்த காப்பான் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசும்போது தான் மேலே சொல்லப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

காப்பான் படத்தில் நடித்த ஆர்யா, முன்னதாக பாலாவின் இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் நடித்து இருந்தார். அதில் அகோரியாக  நடித்து இருந்த ஆர்யாவின் நடிப்பைப் பாராட்டும் வகையில் அகோரிகளுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை சுட்டிக் காட்டும் வகையில் தான் ரஜினிகாந்த் இதைக் கூறியிருந்தார். 

முன்னதாக ரஜினி நடித்து இருந்த அருணாச்சலம் படத்தில், ரஜினிகழுத்தில் அணிந்திருக்கும் கயிற்றிலிள்ள ருத்திராட்சையை குரங்கு பிடுங்கிச் செல்லும். அதைத் துரத்திச் சென்று ருத்திராட்சையை எடுக்கப் போகும் போது தான் வில்லன்களின் சதியைத் தெரிந்து கொள்வார். அதன் பிறகு தான் படத்தில் அரசியல்வாதி அவதாரமும் எடுப்பார் ரஜினி.

ரஜினியின் தனிப்பட்ட வாழ்விலும் இத்தகைய ஆன்மீகம் தொடர்பான சம்பவங்கள் ஏராளம் நடந்துள்ளதால், அரசியலிலும் அதிசயம், அற்புதம் நடக்கும் என்று நம்புகிறார் போலும். ”எழுச்சி அரசியல்” என்று புதிய அரசியல் அவதாரம் எடுத்த ரஜினிகாந்த், கொரோனா பேரிடர் காலத்தில் புதிய முடிவுகள் எதுவும் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது.

A1TamilNews.com