அரவிந்தசாமியின் ‘கள்ளபார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

 

அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியுள்ள ‘கள்ளபார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

தனிஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யூ என்ற நெகட்டிவ் ரோல் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தவர் நடிகர் அரவிந்த் சாமி. தற்போது பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்தவகையில் சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி,கள்ளபார்ட், நரகாசூரன் ஆகிய திரைப்படங்கள் அரவிந்த் சாமிக்கு ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ள கள்ளபார்ட் படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டுள்ளது.

‘என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ ஆகிய படங்களை இயக்கியவர் ராஜபாண்டி. அவருடைய இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படம் 'கள்ளபார்ட்'. இதில் அரவிந்த்சாமியுடன் ரெஜினா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'ஸ்கெட்ச்' படத்தை தயாரித்த மூவிங் ஃபிரேம் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. ராதாகிருஷ்ணன் வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.